கரிபியன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| நீலம் = கரிபியன் கடல் பச்சை = மேற்கிந்தியத் தீவுகள் |
கரிபியன் (Caribbean, டச்சு: Cariben அல்லது Caraïben அல்லது Antillen; பிரெஞ்சு: Caraïbe அல்லது Antilles; ஸ்பானிஷ்: Caribe) அமெரிக்கக் கண்டத்தின் ஒரு பகுதி. இது கரிபியன் கடல், மற்றும் அதன் தீவுகள், அவற்றின் கரையோரப் பகுதிகளையும் உள்ளடக்கிய பகுதியைக் குறிக்கும். இப்பகுதி வட அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியையும் மத்திய அமெரிக்காவின் கிழக்குப் பகுதியையும் தென் அமெரிக்காவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
இப் பகுதியில் மொத்தம் 7,000 தீவுகள், சிறு தீவுகள், reefs, மற்றும் cays ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மேற்கிந்தியத் தீவுகள் என்பவை அண்டிலெஸ் (Antilles), மற்றும் பஹாமாஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாகும். பொதுவாக, மேற்கிந்தியத் தீவுகள் என்பது வட அமெரிக்காவின் ஒரு பகுதியாகவும் விடுதலை பெற்ற நாடுகள், வெளிநாட்டுத் தாபனங்கள், மற்ற நாடுகளில் தங்கியிருக்கும் பிரதேசங்கள் என மொத்தம் 28 தனியான பிரதேசங்களை உள்ளடக்கியவை ஆகும். ஒரு காலத்தில் 10 ஆங்கிலம்-பேசும் நாடுகளைக் கொண்ட "மேற்கிந்தியக் கூட்டமைப்பு" என்ற நாடு சிறிது காலம் இங்கிருந்தது.
கரிபியன் தீவுகள் என்பது 2,500 மைல்கள் நீளமும் 160 மைல்களுக்கும் குறைவான அகலமும் கொண்ட ஒரு தீவுத் தொடராகும்.[1]
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Rogozinski, Jan (1999). A Brief History of the Caribbean, Revised, New York: Facts on File, Inc.. ISBN 0-8160-3811-2, p. 3.

