பெரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெரு குடியரசு
República del Perú
பெரு குடியரசு
பெரு கொடி பெரு சின்னம்
நாட்டுப்பண்
Somos libres, seámoslo siempre  (எசுப்பானிய மொழியில்)
நாங்கள் கட்டற்றவர்கள், எப்பொழுதும் அப்படியே இருப்போமாக

Location of பெரு
தலைநகரம்
பெரிய நகரம்
லிமா
12°2.6′S, 77°1.7′W
ஆட்சி மொழி(கள்) எசுப்பானிய மொழி1
மக்கள் பெரூவியர்
அரசு அரசியல்சட்டக் குடியரசு
 -  குடியரசுத் தலைவர் ஆலன் கார்சியா பெரேசு
 -  தலைமை அமைச்சர் ஹோர்கெ டெல் காஸ்ட்டியோ
(Jorge Del Castillo)
விடுதலை ஸ்பெயின் பேரரசிடம் இருந்து 
 -  அறிவிப்பு ஜூலை 28 1821 
பரப்பளவு
 -  மொத்தம் 1,285,220 கிமீ² (20 ஆவது)
496,222 சது. மை 
 -  நீர் (%) 8.80
மக்கள்தொகை
 -  ஜூலை 2007 estimate 28,674,757 (41 ஆவது)
 -  2005 census 27,219,266 
மொ.தே.உ (கொ.ச.வே) 2005 கணிப்பீடு
 -  மொத்தம் $170.089 பில்லியன் (51 ஆவது)
 -  தலா/ஆள்வீதம் $6,715 (94 ஆவது)
மொ.தே.உ(பொதுவாக) 2006 மதிப்பீடு
 -  மொத்தம்l $93.268 பில்லியன் (55 ஆவது)
 -  தலா/ஆள்வீதம் $3,374 (87 ஆவது)
ஜினி சுட்டெண்? (2002) 54.6 () 
ம.வ.சு (2004) 0.767 (நடு) (82 ஆவது)
நாணயம் நூவோ சோல் (PEN)
நேர வலயம் PET (ஒ.ச.நே.-5)
இணைய குறி .pe
தொலைபேசி +51
1 கெச்சுவா, அய்மாரா மற்றும் பல பழங்குடி மக்கள் மொழிகள் பல இடங்களில் பேசப்படுகின்றன.

பெரு (எசுப்பானியம்: Perú, கெச்சுவா: பிரூவ் Piruw, அய்மாரா: பிரூவ் Piruw), நாடானது முறையாக பெரு குடியரசு என்று அழைக்கப்படுகின்றது. (எசுப்பானியம்: República del Perú (help·info), IPA: [re'pu.βli.ka del pe'ɾu]). பெரு நாடு தென் அமெரிக்காவின் வடபகுதியில் மேற்கே அமைதுள்ள பெரிய நாடு. இதன் வடக்கில் ஈக்வெடார், கொலம்பியா நாடுகளும் கிழக்கில் பிரேசில் நாடும் தெற்கில் சிலி மற்றும் பொலிவியா நாடுகளும் உள்ளன. தென் கிழக்கே பசிபிக் பெருங்கடல் உள்ளது. பெருவில் உள்ளவர்களில் மிகப்பெரும்பாலானோர் எசுப்பானிய மொழி பேசுகிறார்கள். இநாட்டில் உலகிலேயே மிகப்பெரும் ஆறாகிய அமேசான் ஆறு பாய்கின்றது. .

தொல் பழங்காலத்தில் இன்றைய பெரு நாட்டுப் பகுதியில் உலகின் சிறப்பு வாய்ந்த தொல்பழம் நாகரீகங்களில் ஒன்றான வடச் சிக்கோ நாகரீகம் செழித்து இருந்தது. அது மட்டுமல்லாமல், கொலம்பஸ் அமெரிக்கக் கண்டத்தில் கால் வைக்கும் முன்னர் அமெரிக்கக் கண்டங்களில் இருந்த யாவற்றினும் மிகப்பெரிய பேரரசாக விளங்கிய இன்க்கா பேரரசும் இங்குதான் இருந்தது. 16 ஆவது நூற்றாண்டில் (கி.பி), எசுப்பானியப் பேரரசு இன்க்கா பேரரசை வென்று ஆட்சி செலுத்தத்தொடங்கியது. 1821ல் இன்றைய பெரு நாடு எசுப்பானிய பேரரசிடம் இருந்து விடுதலை பெற்றது. கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக பெரு நாடு பலவிதமான அரசியல் மற்றும் பொருளியல் குழப்பங்களுக்கும் உள்ளாகி, ஏற்றத்தாழ்வுகள் அடைந்து இன்று முனைந்து முன்னேறி வரும் ஒரு நாடு ஆகும்.

பெரு நாடு மக்களால் தேர்ந்தெடுக்கும் குடியரசுத் தலைவரால் மக்களாட்சி முறையில் 25 நிலப்பகுதிகளாக வகுத்து ஆளப்படுகின்றது. இந்நாட்டின் நில, வானிலைச் சூழல் அமைப்புகள் மிகப் பல வகையின. உலகில் உள்ள 32 வகையான வானிலைச் சூழல் வகைகளில் 28 வகையை இந்நாட்டில் காணலாம்[1]. நில உலகில் உள்ள தனித்து அறியத்தக்க 117 வகையான நில-உயிரின-செடிகொடியின சூழகங்களில் 84 வகையான பகுதிகள் இநாட்டில் உள்ளன[2], இந்நாட்டு நிலப்பகுதிகளில் பசிபிக் பெருங்கடல் கரையோரப்பகுதிகளில் இருக்கும் ஈரப்பதம் குறைந்த வரண்ட நிலப்பகுதிகளில் இருந்து மழைக்காடுகள் நிறந்த அமேசான் காடுகளும் பனி சூழ்ந்த உயர் ஆண்டீய மலைகளும் உள்ளன. இந்நாட்டில் 60% பரப்பளவு காடுகள் சூழ்ந்துள்ளன. என்றாலும் அதில் 6% மக்கள்தொகையினரே வாழ்கின்றனர். இந்நாடு வளரும் நாடுகளில் ஒன்றாகும். தற்பொழுது 50% மக்கள் ஏழ்மையில் இருக்கின்றார்கள் எனினும் நடுத்தரமான மனித வளர்ச்சி சுட்டெண் கொண்டுள்ள நாடு ஆகும். இந்நாட்டின் பொருள்வளம் கூட்டும் தொழில்கள் வேளாண்மையும், மீன்பிடித்தலும், நிலத்தடி கனிவளம் எடுத்தலும், துணிமணிகள் போன்ற பொருள்களை உற்பத்தி செய்தலும் ஆகும்.

இந்நாட்டின் 28 மில்லியன் மக்கள் பல இனத்தவர்களாகவும் பன்முக பண்பாடுகள் கொண்டவர்களாகவும் உள்ளனர். எசுப்பானிய மொழி பேசுவோர்கள்தாம் பெரும்பான்மையாக இருந்தபோதிலும், இப்பகுதிகளின் "இந்தியர்கள்" என்று சொல்லப்படும் பழங்குடிகளின் மொழிகளாகிய கெச்சுவா மொழியும் (மலைப்பகுதிகளில்), அய்மாரா மொழியும் (தெற்கே), வேறுபல மொழிகளும் (அமேசான் காடுகளில்) பேசுகிறார்கள். பல்லின மக்க்கள் கூடி வாழ்வதால் பல தனித்தன்மை வாய்ந்த உணவு வகைகளும், இசை, இலக்கியம், நடனம் போன்ற கலை வடிவங்களும் சிறப்பாக உள்ளன.

[தொகு] மேற்கோள்கள்

  1. Peru, Footprint
  2. Peru, Footprint
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்