ஆண்டீய மலைத்தொடர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆண்டீய மலைத்தொடர் (அண்டீஸ், Andes) உலகின் மிக நீளமான மலைத் தொடர் ஆகும். இது, தென் அமெரிக்காவின், மேற்குக் கரையோரமாகத் தொடரான உயர்நிலப் பகுதியை உருவாக்குகின்றது. 7,000 கி.மீ (4,400 மைல்கள்) நீளமும், சில பகுதிகளில் 500 கி.மீ வரை அகலமும் கொண்ட ஆண்டீய மலைத்தொடர் சராசரியாக 4,000 மீட்டர் (13,000 அடி) உயரமானது. நில கிடைவரைக் கோடுகள் தெற்கு 18° முதல் 20° வரையில் உள்ள பகுதிகள் மிக அகலமானவை (18° to 20°S latitude). ஆண்டீய மலைத்தொடரில் மிகவும் உயரமான மலை முகடு அக்கோன்காகுவா (உயரம் 6,962 மீ (22,841 அடி)) ஆகும். இமயமலைத் தொடருக்கு அடுத்தாற்போல் உலகிலேயே அதிக உயரமான மலைகள் இந்த ஆண்டீய மலைத்தொடரில்தான் உள்ளன. உயரத்தில் இமயமலையை நெருங்க முடியாவிட்டாலும், நீளத்தில் இம்மமைத்தொடர் இமயமலைத்தொடரைப்போல இரு மடங்கு நீளமானது. அகலத்திலும் இமயமலைத்தொடருக்கு ஈடாக நிற்பது. ஆண்டீய மலைத்தொடரானது தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினா, பொலிவியா, சிலி, கொலம்பியா, ஈக்வெடோர்,பெரு, வெனிசூயெலா ஆகிய ஏழுநாடுகள் ஊடாக எழுந்து நிற்கின்றது. உயர்மலைகளைக் கொண்ட இந்நாடுகளை ஆண்டீய நாடுகள் என்று அழைப்பதும் வழக்கம்.
ஆண்டீய மலைத்தொடர் முக்கியமாக கிழக்கத்திய கோர்டில்லேரா[1](Cordillera Oriental) எனப்படும் மலையடுக்கும், மேற்கத்திய கோர்டில்லேரா (Cordillera Occidental) என அழைக்கப்படும் மலையடுக்கும் ஆகிய இரண்டு பெரும் மலைத்தொடர்களை உள்ளடக்கியுள்ளது.
ஆண்டீய மலைத்தொடரில் உள்ள சில உயரமான மலை முகடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இம்மலை முகடுகளைப் பற்றி எண்ணும் பொழுது, அலாஸ்க்கா மலைத்தொடரில் உள்ள மெக்கின்லி மலையைத்தவிர வட அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ, ஆப்பிரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ 6000 மீட்டருக்கும் உயரமான மலைகள் எங்கும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும்.
பொருளடக்கம் |
[தொகு] அர்ஜென்டினா-சிலி நாடுகளில் உள்ள மலை முகடுகள்
- செர்ரோ பாயோ [2](Cerro Bayo), 5,401 மீ (m)
- செர்ரோ சால்ட்டென்(Cerro Chaltén), 3,375 மீ or 3,405 மீ, பட்டகோனியா, இது செர்ரோ ஃவிட்ஸ் அல்லது செர்ரோ ஃவிட்ஸ் ராய் (Cerro Fitz Roy) என்றும் அழைக்கப்படுகின்றது.
- செர்ரோ எஸ்க்கோரியால் (Cerro Escorial), 5,447 மீ
- கோர்டோன் டெல் ஆசுஃவ்ரே (Cordón del Azufre), 5,463 மீ
- ஃவால்சோ ஆசுஃவ்ரே (Falso Azufre), 5,890 மீ
- இன்க்காவுசி (Incahuasi), 6,620 மீ
- லாஸ்ட்டாரியா (Lastarria), 5,697 மீ
- யுல்யையையாக்கோ (Llullaillaco), 6,739 மீ
- மைப்போ எரிமலை (Maipo)), 5,264 மீ
- மார்மோலேஃகோ (Marmolejo), 6110 மீ
- ஓஃகோஸ் டெல் சலாடோ (Ojos del Salado), 6,893 மீ
- ஓல்க்கா (Olca), 5,407 m
- சியெர்ரா நெவாடா டெ லகூனாஸ் பிராவாஸ் (Sierra Nevada de Lagunas Bravas), 6,127 மீ
- சோக்கோம்ப்பா (Socompa), 6,051 மீ
- நெவாடோ டிரேஸ் குரூசெஸ் (Nevado Tres Cruces), 6,749 மீ (தென் முகடு) (III Region)
- டுப்புன்காட்டோ (Tupungato), 6,570 மீ
- நாசிமியென்ட்டோ (Nacimiento), 6,492 மீ
[தொகு] பொலிவியா நாட்டில் உள்ள மலை முகடுகள்
- அன்க்கோவுமா(Ancohuma), 6,427 மீ
- கபாரே (Cabaray), 5,860 மீ
- சக்கால்தயா (Chacaltaya), 5,421 மீ
- உய்னா பொட்டோசி (Huayna Potosí), 6,088 மீ
- இல்யாப்பு அல்லது இயாம்ப்பு (Illampu), 6,368 மீ
- இல்யாமனி அல்லது இயாமனி (Illimani), 6,438 மீ
- மாச்சீசோ டெ லரான்க்காகுவா (Macizo de Larancagua), 5,520 மீ
- மாச்சீசோ டெ பக்கூனி (Macizo de Pacuni), 5,400 மீ
- நெவாடோ அன்னாயாஃகசி (Nevado Anallajsi), 5,750 மீ
- நெவாடோ சஃகாமா (Nevado Sajama), 6,542 மீ
- பாட்டியா பட்டா (Patilla Pata), 5,300 மீ
- தாத்தா சபாயா (Tata Sabaya), 5,430 மீ
[தொகு] பொலிவியா-சிலி நாடுகளின் எல்லையில் உள்ள மலை முகடுகள்
- அக்கோட்டாங்கோ (Acotango), 6,052 மீ
- செர்ரோ மின்ச்சின்ச்சா (Cerro Minchincha), 5,305 மீ
- இறுபுட்டுன்க்கு (Irruputuncu), 5,163 மீ
- லிக்கான்காபுர் (Licancabur), 5,920 மீ
- ஓல்க்கா (Olca), 5,407 மீ
- பரினாக்கோட்டா எரிமலை (Parinacota), 6,348 மீ
- பருமா (Paruma), 5,420 மீ
- போமராப்பே (Pomerape), 6,282 மீ
[தொகு] குறிப்புகள்
- ↑ கோர்டில்லேரா (Cordillera) என்பது இணையாகத்தொடரும் மலையடுக்கத்தைக் குறிக்கும் சொல்
- ↑ செர்ரோ (Cerro) என்னும் சொல் எசுப்பானிய மொழியில் மலை என்னும் பொருள் தருவது