புதிய உலகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதிய உலகம் என்பது புவியின் மேற்கு அரைக்கோளத்தையோ அமெரிக்காக்கள் எனப்படும் வட, தென் அமெரிக்க நாடுகளையோ அல்லது ஓசியானியா நாடுகளையோ குறிக்கப் பயன்படும் ஒரு சொல்லாகும். பதினாறாம் நூற்றாண்டின் துவக்கங்களில் ஐரோப்பிய கண்டுபிடிப்பாளர்கள் அமெரிக்காவை கண்டுபிடித்த காலங்களில் இந்த வார்த்தை உருவானது. அதுவரை ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா போன்ற பகுதிகள் மட்டுமே அடங்கியது தான் இவ்வுலகம் என்று எண்ணிவந்த ஐரோப்பியர்கள் தாங்கள் கண்டுபிடித்த அமெரிக்கா போன்ற நாடுகளைப் புதிய உலகம் என்று அழைக்கலானர்கள். இவ்வாறு புதிய உலகம் என்ற பெயர் இன்றளவும் நிலைக்கலாயிற்று. தற்போதும் அமெரிக்காக்களை உலகின் நான்காவது பகுதி என்று அழைக்கும் வழக்கம் உள்ளது.