பெருங்கடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இயங்குபட வடிவில் உலகின் பெருங்கடல்களைக் காட்டும் நிலப்படம்.

பெருங்கடல் என்பது முக்கியமான உப்பு நீர் நிலை. இது நீர்க் கோளத்தின் முக்கியமான கூறும் ஆகும். ஏறத்தாழ 71% புவி மேற்பரப்பு (361 மில்லியன் சதுர கிலோமீட்டர்) தொடர்ச்சியாக அமைந்துள்ள பெருங்கடல்களினால் மூடப்பட்டுள்ளது. இது பல பெருங்கடல்களாகவும், பல சிறிய கடல்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் பரப்பளவின் அரைப் பகுதிக்கு மேல் 3,000 மீட்டருக்கு (9,800 அடி) மேற்பட்ட ஆழம் கொண்டது. சராசரி உப்புத்தன்மை ஆயிரத்தில் 35 பகுதி (35%) ஆகும். பொதுவாக முழுக் கடல்நீரும் சராசரியாக ஆயிரத்துக்கு 30 - 38 பகுதிகள் உப்புத்தன்மை கொண்டது.

பொதுவாகப் புவி மேற்பரப்பிலுள்ள பெருங்கடல்கள் தனித்தனியானவை எனக் கொள்ளப்பட்டு வந்தாலும், அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள உப்பு நீருடன் கூடிய உலகப் பெருங்கடல் ஆகும். இவ்வாறு பெருங்கடல்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கட்டற்ற பரிமாற்றங்களைக் கொண்ட ஒரே உலகப் பெருங்கடல் என்னும் கருத்துரு கடலியலில் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது. முதன்மையான பெருங்கடல் பிரிவுகள், ஒரு பகுதி கண்டங்களாலும், தீவுக் கூட்டங்களாலும், பிற கட்டளை விதிகளாலும் வரையறுக்கப்பட்டுள்ளன.

பசிபிக், அத்திலாந்திக் பெருங்கடல்களை புவி மையக் கோட்டை வைத்து வடக்குத் தெற்குப் பகுதிகளாகப் பிரிப்பதும் உண்டு. பெருங்கடல்களின் சிறிய பகுதிகள் கடல்கள், வளைகுடாக்கள், விரிகுடாக்கள் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இவற்றைவிட நிலத்தால் சூழப்பட்ட சில உப்புநீர் நிலைகளும் உள்ளன. ஆரல் கடல், பெரும் உப்புநீரேரி போன்றன இவற்றுட் சில. இவை கடல் என அழைக்கப்பட்டாலும் உண்மையில் இவை உப்புநீரேரிகளே. அட்லாண்டிக் பெருங்கடல்

"http://ta.wikipedia.org/w/index.php?title=பெருங்கடல்&oldid=1351538" இருந்து மீள்விக்கப்பட்டது