கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓசியானியா (Oceania) என்பது பசிபிக் பெருங்கடலையும் அதனைச் சூற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள நிலத்தையும் தீவுகளையும் குறிக்கும் புவியியல் பெயராகும். ஓசியானியா என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் பிரெஞ்சு நாடுகாண் பயணியான ஜூல் டூமோன்ட் டேர்வில் என்பவர். இன்று இச்சொல் பல மொழிகளில் கண்டங்களில் ஒன்றை வரையறுப்பட்தற்குப் பயன்படுத்தப்படுகிறது[1][2][3].
ஓசியானியாவில் உள்ள தீவுகள் மூன்று வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை: மெலனீசியா, மைக்குரோனீசியா, மற்றும் பொலினீசியா.[4].
ஓசியானாவின் எல்லைகள் பல வழிகளில் வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவற்றில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நியூ கினி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆஸ்திரலேசியா, மலே தீவுக்கூட்டம் ஆகியவை ஓசியானியாவில் அடக்கப்பட்டுள்ளன[5].
[தொகு] மேற்கோள்கள்
- ↑ கனடா - உலகம் - கண்டங்கள் - நிலவரை
- ↑ கண்டங்களின் அடிப்படையில் ஒலிம்பிக் உறுப்பு நாடுகள்
- ↑ என்கார்ட்டா மெக்சிக்கோ "ஓசியானியா"
- ↑ கொலம்பியா என்சைக்கிளோபீடியா "ஓசியானியா"
- ↑ மெரியம் வெப்ஸ்டரின் ஒன்லைன் அகராதி
| பா • உ • தொ உலகின் பெரும்பகுதிகள் |
|
|
|