மியான்மர்
ப்யி-தௌங்-சு மியன்-மா நைங்-ஙன்-தௌ மியான்மார் ஒன்றிய குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| நாட்டுப்பண் கபா மா கியை |
||||||
| தலைநகரம் | நைப்பியித்தௌ |
|||||
| பெரிய நகரம் | ரங்கூன் | |||||
| ஆட்சி மொழி(கள்) | பர்மியம் | |||||
| பிரதேச மொழிகள் | ஜிங்போ, ஷான், கரென், மொன் | |||||
| மக்கள் | பர்மியர் | |||||
| அரசு | இராணுவ அரசு | |||||
| - | நாட்டு அமைதி வளர்ச்சி சபையின் தலைவர் | தான் சுவே | ||||
| - | நாட்டு அமைதி வளர்ச்சி சபையின் துணைத் தலைவர் | மௌங் அயே | ||||
| - | பிரதமர் | தைன் சைன் | ||||
| - | நாட்டு அமைதி வளர்ச்சி சபையின் முதலாம் அமைச்சர் | திஹா துரா தின் ஔங் ம்யின்ட் ஊ | ||||
| தோற்றம் | ||||||
| - | பகன் | 1044-1287 | ||||
| - | சிறு இராச்சியங்கள் | 1287-1531 | ||||
| - | தௌங்கூ | 1531-1752 | ||||
| - | கொன்பௌங் | 1752-1885 | ||||
| - | பிரித்தானிய இராச்சியம் | 1886-1948 | ||||
| - | ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுதலை | ஜனவரி 4 1948 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 6,76,578 கிமீ² (40வது) 2,61,227 சது. மை |
||||
| - | நீர் (%) | 3.06 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2005-2006 மதிப்பீடு | 55,400,000 (24வது) | ||||
| - | 1983 குடிமதிப்பு | 33,234,000 | ||||
| - | அடர்த்தி | 75/கிமீ² (119வது) 193/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $93.77 பில்லியன் (59வது) | ||||
| - | நபர்வரி | $1,691 (150வது) | ||||
| ம.வ.சு (2007) | ||||||
| நாணயம் | கியட் (K) (mmK) |
|||||
| நேர வலயம் | MMT (ஒ.ச.நே.+6:30) | |||||
| இணைய குறி | .mm | |||||
| தொலைபேசி | +95 | |||||
மியான்மர் அல்லது மியான்மார் அல்லது பர்மா ஆசியாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்த நாடாகும். இன்றைய இரும்புத் திரை நாடு. 1989ம் ஆண்டு பர்மா என்ற நாட்டின் பெயரை மியான்மர் நைங்கண்டௌ (அல்லது Union of Myanmar) என்று மாற்றினர். அப்போதைய தலைநகர் ரங்கூன் பின்னர் யங்கோன் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2006 ஆம் ஆண்டின் பின்னர் மியான்மரின் தலைநகராக நைப்பியித்தௌ மாற்றியமைக்கப்பட்டது.
12,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இங்கு வாழ்ந்தனர். ஆனால் அரசாட்சி பொ.மு. முதலாம் நூற்றாண்டிற்றான் தொடங்கியது எனக் கருதப்படுகிறது. சுமார் 130 இனங்கள் வாழ்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும் வட்டார வழக்குகளும் உள்ளன. அரசு மொழி: பர்மியம்.
பல்லாயிரக்கணக்கான புத்த விகாரைகள் நாடு முழுவதும் பரவியிருப்பதால், இது 'Land of Pagodas' என்றும் வழங்கப்படுகிறது. யங்கோனில் உள்ள தங்கத்தால் வேயப்பட்ட "ஷ்வே டகோன் பகோடா" மிகவும் புகழ் பெற்றது. மண்டலையில் உள்ள குத்தோடௌ தாதுகோபத்தில் உலகின் மிகப் பெரியப் புத்தகம் (729 பளிங்குப் பலகைகளால் ஆனது) உள்ளது.
பெருந்தொழில்கள் எல்லாம் அரசின் கையில். விவசாயம், சிறுதொழில்கள், போக்குவரத்து போன்றவை தனியார் வசம்.
தொழிலாளிகளில் 67.4% பேர் விவசாயத்தில். ஐராவதி ஆறு படுகையில் உலகின் வளமான நெல் விளை நிலங்கள் உள்ளன.மணி வளங்கள் நிறைந்த நாடு. தமிழர்கள் முன்பு அதிக அளவில் வாழ்ந்தனர்.