திபெத்திய-பர்மிய மொழிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| திபெத்திய-பர்மிய மொழிகள் | ||
|---|---|---|
| புவியியல் பரம்பல்: |
தென்கிழக்காசியா, கிழக்காசியா, தெற்கு ஆசியா | |
| மொழி வகைப்பாடு: | சீன-திபெத்திய மொழிகள் திபெத்திய-பர்மிய மொழிகள் |
|
| முதனிலை-மொழி: | முதல்நிலை திபெத்திய-பர்மிய மொழிகள் | |
| துணைப்பிரிவு: |
Tujia (unclassified)
|
|
| ISO 639-5: | tbq | |
திபெத்திய-பர்மிய மொழிகள் (Tibeto-Burman languages) தென்கிழக்கு ஆசியாவின் உயர்நிலப் பகுதிகளிலும், பர்மாவின் (மியான்மர்) தாழ்நிலப் பகுதிகளிலும் பேசப்படுகிறது. இதில் 400 இற்கும் மேற்பட்ட சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தின் சீன உறுப்பினர்கள் அல்லாத மொழிகள் உள்ளன. இக்குழு, அதன் மிகவும் பரவலாகப் பேசப்படும் உறுப்பினர்களான பர்மிய (மில்லியன் 32 க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள்) மற்றும் திபெத்திய (8 மில்லியன் மேல்) மொழிகள் கொண்டு பெயரிடப்பட்டது. பிற மொழிகள் மிகச் சிறிய சமுதாயங்களில் பேசப்படுகிறது. பரவலாக சீன-திபெத்திய மொழிக்குடும்பம், சீன மற்றும் திபெத்திய-பர்மிய மொழிக்குடும்ப கிளைகளாக பிரிக்கிறது. சில அறிஞர்கள் திபெத்திய-பர்மன் ஒரு ஒற்றைத்தொகுதி குழு என்பதை மறுக்கின்றனர்.