சீனக் குடியரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
中華民國
ஜொங் ஹ்வா மின் க்வோ
சீனக் குடியரசு
தாய்வானின் கொடி தாய்வானின் சின்னம்
குறிக்கோள்
கிடையாது
நாட்டுப்பண்
"சீனக் குடியரசின் நாட்டு வணக்கம்"
Location of தாய்வானின்
தலைநகரம்
பெரிய நகரம்
தாய்பெய்
25°02′N, 121°38′E
ஆட்சி மொழி(கள்) மண்டரின்
அரசு அரை-அதிபர் முறை
 -  அதிபர் ச்சென் சுயி-பியான்
 -  உப-அதிபர் அனத்தே லூ
 -  பிரதமர் சூ ட்செங் ச்சாங்
நிறுவுதல் சின்கய் புரட்சி 
 -  அறிவிப்பு அக்டோபர் 10, 1911 
 -  அமைப்பு ஜனவரி 1, 1912 
 -  தாய்வானுக்கு செல்லுதல் டிசம்பர் 7, 1949 
பரப்பளவு
 -  மொத்தம் 35,980 கிமீ² (137வது)
13,892 சது. மை 
 -  நீர் (%) 2.8
மக்கள்தொகை
 -  June 2006 மதிப்பீடு 22,814,636 (47th 2)
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $631.2 பில்லியன் (16வது)
 -  நபர்வரி $27,600 (24வது)
ம.வ.சு (2003) 0.910 (உயர்) (25வது 2)
நாணயம் புதிய தாய்வான் டொலர் (NT$) (TWD)
நேர வலயம் சுங்கியான் சீர் நேரம் (ஒ.ச.நே.+8)
இணைய குறி .tw
தொலைபேசி +886
1.) 2005 தரவுகளின் படியானது.
2.) சீனக் குடியரசின் அரசியல் நிலை காரணமாக ஐநா மனித வளர்ச்சி சுட்டெண்ணை கணிக்க வில்லை. எனினும் சீனக் குடியரசின் தகவலின் படியான தரவு தரப்பட்டுள்ளது.[1]
History of China
சீன வரலாறு
பண்டைய
3 Sovereigns and 5 Emperors
சியா அரசமரபு 2100–1600 கிமு
சாங் அரசமரபு 1600–1046 கிமு
சவு அரசமரபு 1045–256 BCE
 Western Zhou
 Eastern Zhou
   Spring and Autumn Period
   போரிடும் நாடுகள் காலம்
பேரரசு
சின் அரசமரபு 221 கிமு–206 கிமு
ஆன் அரசமரபு 206 BCE–220 CE
  மேற்கு ஆன்
  Xin Dynasty
  கிழக்கு ஆன்
மூன்று இராச்சியங்கள் 220–280
  வேய்i, சூ & வூ
யின் அரசமரபு 265–420
  மேற்கு யின் 16 இராச்சியங்கள்
304–439
  கிழக்கு யின்
Southern & Northern Dynasties
420–589
சுயி அரசமரபு 581–618
தாங் அரசமரபு 618–907
  ( Second Zhou 690–705 )
5 அரசமரபுகள் & 10 அரசுகள்
907–960
Liao Dynasty
907–1125
சொங் அரசமரபு
960–1279
  Northern Song W. Xia
  Southern Song Jin
யுவான் அரசமரபு 1271–1368
மிங் அரசமரபு 1368–1644
சிங் அரசமரபு 1644–1911
தற்காலம்
சீனக் குடியரசு 1912–present
சீன மக்கள் குடியரசு
1949–present
சீனக் குடியரசு
(தாய்வான்)
1912–present


சீனக் குடியரசு கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு தீவு நாடாகும். முன்னர் முழுச் சீனாவினதும் அரசாக இருந்து சீன உள்நாட்டு யுத்தம் காரணமாக சீனப் பெருநிலப்பரப்பின் ஆட்சியை மக்கள் சீன குடியரசிடம் இழந்தது. 1940 களின் பிறகு சீன குடியரசு, தாய்வான் உட்பட சில தீவுக்கூட்டங்களை மட்டுமே ஆட்சி செய்து வருகிறது. பின்வந்த காலங்களில் சீனக் குடியரசானது தாய்வான் என்றே அழைக்கப்பட்டது. 1970களின் பின்னர் "சீனா" என்பது மக்கள் சீன குடியரசை குறிப்பதாக அமைந்துவிட்டது. மேலும் சீனக் குடியரசானது சீன தைபே என அழக்கப்படலாயிற்று.

சீனக் குடியரசானது 1912 இல் கடைசி சீன அரசவம்சமான கின் அரச வம்சத்தை நீக்கிவீட்டு அமைக்கப்பட்டதாகும். இத்தோடு இரண்டாயிரம் ஆண்டு பழைமையான சீன அரசாட்சி முடிவுக்கு வந்தது. ஆகவே இதுவே கிழக்காசியாவின் மிகப்பழைமையான குடியரசாகும். சீன பெருநிலப்பரப்பில் சீன குடியசின் ஆட்சியானது சிற்றரசு ஆட்சி, மற்றும் யப்பானிய ஆக்கிரமிப்பு சீன உள்நாட்டு யுத்தம் போன்றவற்றைக் கண்டது. உள்நாட்டு யுத்தம் 1950 இல் முடிவடையும் போது சீன கம்யூனிசக் கட்சி சீன பெருநிலப்பரப்பின் பெரும் பிரதேசத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. சீனக் குடியரசோ தாய்வான் உட்பட சில தீவுகளை மட்டுமே கொண்டிருந்தது. சீன கம்யூனிச கட்சி 1949இல் பீஜிங்கில் மக்கள் சீனக் குடியரசு என்ற புதிய நாட்டை பிரகடனப்படுத்தியது. ஆனால் சீன குடியரசு முழுச்சீனா மிதான சட்டப்படியான அரசு தானே என்ற கருத்தை கொண்டிருந்தது. இதுவே 1970கள் வரையும் பல நாடுகளின் கருத்தாகவும் காணப்பட்டது.

1928 முதல் சீன குடியரசானது சீனத் தேசியக் கட்சியால் (குமிண்டாங்) சர்வாதிகார முறையில் ஆளப்பட்டது. 1950 மற்றும் 1960 இல் சீ.தே.க. ஊழல்களை குறைத்து பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தது. இதன் காரணமாக நாட்டில் யுத்த அபாயமும் குழப்பநிலையும் தொடர்ந்த போதும் பொருளாதாரம் மிக வளர்ச்சி கண்டது. 1980 மற்றும் 1990 இல் சீன குடியரசான சனநாயக முறைக்கு மாறுவதற்கான தொடர்ந்த ஈடுபாடு காரணமாக அரசியல் புது வடிவைக் கண்டது. இதன் படி 1996 இல் அது முதலாவது அதிபர் தேர்தலை நடத்தியது. 2000 ஆம் ஆண்டு தேர்தல் மூலமாக சீ.தே.க. சார்பற்ற ஒருவர் முதல் முறையாக அதிபராக பதவியேற்றுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சீனக்_குடியரசு&oldid=1421727" இருந்து மீள்விக்கப்பட்டது