ஜான்ஸ்டன் பவளத்தீவு
ஜான்ஸ்டன் பவளத்தீவு (Johnston Atoll) வடக்கு பசிபிக் பெருங்கடலில் ஹவாய் தீவுகளிலிருந்து ஏறத்தாழ 1400 கிமீ(750 கடல்வழி மைல்கள்)தொலைவில் 50-square-mile (130 கிமீ2)பரப்பு கொண்ட பவளப்பாறையாகும்.[1] இந்த பவளப்பாறை திட்டை மையப்படுத்தி நான்கு தீவுகள் அமைந்துள்ளன;இவற்றில் இரண்டு இயற்கையான ஜான்ஸ்டன் தீவு மற்றும் மணல் தீவு,பவளப்பாறை அகழ்தல் மூலம் விரிவாக்கப்பட்டிருக்கின்றன.வடக்கு தீவு (அகௌ)மற்றும் மிழக்குத் தீவு(இகினா) இரண்டும் முற்றிலும் பவளப்பாறை அகழ்வினால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.[1]
ஜான்ஸ்டன் ஐக்கிய அமெரிக்காவின் ஆளுமைக்குட்பட்ட ஆட்சிப்பகுதியாகும்.1958-1975 காலப்பிரிவில் இங்கு பல அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டன.பின்னர் இங்கு அமெரிக்காவின் வேதியியல் ஆயுதங்கள் சேமிப்புக் கிடங்கு செயல்பட்டது.தற்போது அவை அழிக்கப்பட்டு இராணுவ பொறுப்பிலிருந்து உள்துறை பொறுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள் [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Johnston Atoll தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Johnston Island Memories Site, the personal website of an AFRTS serviceman stationed there in 1975-6
- Coast Guard Medevac from Johnston Island, photo from December 2007 medevac operation.
- JACADS - Johnston Atoll Chemical Agent Disposal System, history of nuclear testing, and JACADS Sarin and VX nerve agent disposal.
- U.S. Fish & Wildlife Johnston Island National Wildlife Refuge Contains additional information on wildlife and clean-up efforts.