குக் தீவுகள்
| குக் தீவுகள் Kūki 'Āirani |
||||
|---|---|---|---|---|
|
|
||||
| நாட்டுப்பண் Te Atua Mou E God is Truth |
||||
| தலைநகரம் பெரிய நகரம் |
Avarua |
|||
| ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் குக் தீவு மஓரி |
|||
| மக்கள் | குக் தீவினர் | |||
| அரசு | அரசியலமைப்பு முடியாட்சி | |||
| - | அரச தலைவர் | அரசி இரண்டாம் எலிசபேத் | ||
| - | அரசியின் பிரதிநிதி | Sir Frederick Goodwin |
||
| - | பிரதமர் | ஜிம் மருரை | ||
| இணைக்கப்பட்ட நாடு | ||||
| - | சுயாட்சி தன்னிச்சையாக நியூசிலாந்துடன் இணைந்துள்ளது | 4 August 1965 |
||
| பரப்பளவு | ||||
| - | மொத்தம் | 236 கிமீ² (209வது) 91 சது. மை |
||
| மக்கள்தொகை | ||||
| - | Mar 2006 மதிப்பீடு | 18,700 (218வது (2005)) | ||
| - | 2001 குடிமதிப்பு | 18,027 | ||
| - | அடர்த்தி | 76/கிமீ² (117வது) 197/சதுர மைல் |
||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||
| - | மொத்தம் | $183.2 மில்லியன் (தரமில்லை) | ||
| - | நபர்வரி | $9,100 (தரமில்லை) | ||
| நாணயம் | நியூசிலாந்து டாலர் (குக் தீவுகள் டாலர்) ( NZD) |
|||
| நேர வலயம் | (ஒ.ச.நே.-10) | |||
| இணைய குறி | .ck | |||
| தொலைபேசி | +682 | |||
குக் தீவுகள் தன்னிச்சையாக நியூசிலாந்துடன் இணைந்துக் காணப்பட்டும் சுயாட்சி பாராளுமன்ற மக்களாட்சியாகும். தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குக்தீவுகளின் 15 சிறிய தீவுகள் மொத்தம் 240 சதுர கிலோமீட்டர் (92.7 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளன. குக் தீவுகளுக்கான பிரத்தீயே பொருளாதார வலயம் 1.8 மில்லியன் சதுர கிலோமீட்டர் (0.7 மில்லியன் சதுர மைல்) பரப்பளவைக் கொண்டதாகும்.[1]
முக்கிய மக்கள் குடியிருப்பு மையங்கள் ரரொடொங்கா (Rarotonga) தீவில் அமைந்துள்ளன குக்தீவுகளின் பன்னாட்டு விமான நிலையமும் ரரொடொங்கா தீவில் அமைந்துள்ளன. குக் தீவு மக்ககளின் முக்கிய குடியேற்றங்கள் நியூசிலாந்திலும் அமைந்துள்ளது முக்கியமாக நியூசிலாந்தின் வட தீவில் 2006 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது 58,008 பேர் தன்னிச்சையாக குக் தீவுகளின் மஓரி இனத்தவராக தம்மை பதிவு செய்துள்ளனர்.[2]
2006 ஆம் ஆண்டு 90,000 பேர் உல்லாசப்பிரயானிகளாக இங்கு வந்துள்ளனர், உல்லாசபிரயான கைத்தொழில் நாட்டின் முக்கிய வருவாய் மூலமாகும். கடல்சார் உற்பத்திகள், பழங்கள், முத்துக்கள் ஏற்றுமதியும் வெளிநாட்டு வங்கி வைப்பு வருமானங்களும் ஏனைய முக்கிய வருவாய் மூலங்களாகும்.
குக் தீவுகளின் பாதுகாப்புக்கு நியுசிலாந்து பொறுப்பாகும். எனினும் இது குக் தீவுகளின் யாப்புக்குட்பட்டு குக் தீவுகளின் கோரிக்கையின் பேரிலேயே மேற்கொள்ளப்படலாம். அண்மைக்காலமாக குக் தீவுகள் கட்டற்ற வெளிநாட்டுக் கொள்கையை கைக்கொண்டு வருகிறது.
குறிப்புகள் [தொகு]
- ↑ A View from the Cook Islands SOPAC
- ↑ "QuickStats About Culture and Identity - Pacific Peoples". 2006 Census. Statistics New Zealand. பார்த்த நாள் 2007-06-12.
வெளியிணைப்புகள் [தொகு]
விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி
- Cook Islands Government
- Cook Islands Government (summary)
- Cook Islands Tourism Corporation
- Open Directory Project - Cook Islands directory category
- Comprehensive Cook Islands site with news section
- Detailed and non-commercial website
- Cook Islands National Environment Service
- Cook Islands Biodiversity Database
- Photographs of CI banknotes including unique 3 dollar bill
