இன்கா பேரரசு
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இன்கா பேரரசு (Inca Empire) என்பது கொலம்பிய காலத்துக்கு முற்பட்ட அமெரிக்காவின் ஒரு பேரரசாகும்[2]. கொலம்பசின் வருகைக்கு முந்தைய காலத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய பேரரசாக இது விளங்கியது. இப்பேரரசின் தலைநகரம் கஸ்கோ ஆகும். 13ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெருவின் உயர் பிரதேசத்தில் இப்பேரரசு அமைக்கப்பட்டது. 1438 முதல் 1533 வரையான காலப்பகுதியில் தென்னமெரிக்காவின் மேற்குப் பகுதிகள், ஆண்டீஇய மலைத்தொடரை மையப்படுத்திய பகுதிகள், தற்போதைய எக்குவாடோர், பெரு ஆகியவற்றின் பெரும் பகுதிகள் பொலீவியாவின் மேற்கு மற்றும் தென்மத்திய பகுதிகள், ஆர்ஜெண்டீனாவின் வடமேற்குப் பகுதி,சிலியின் வடக்கு மற்றும் வடமத்தியப் பகுதிகள் கொலம்பியாவின் தெற்குப் பகுதி போன்ற பெரு நிலப்பரப்பை இன்காக்கள் அமைதி வழியிலும், பலாத்காரமாகவும் கைப்பற்றி இன்கா பேரரசுடன் இணைத்திருந்தனர். இன்காக்கள் தமது அரசரை "சூரியனின் மகன்" என அழைத்தனர்.
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
12-ஆம் நூற்றாண்டு வாக்கில் பழங்குடியினராக இருந்த இன்க்கா மக்கள் மன்க்கோ கப்பாக் என்பவரின் கீழ் கசுக்கோ என்ற சிறிய நகர அரசை அமைத்தனர். பின்னர் சாப்பா இன்கா பச்சாகுட்டியின் காலத்தின் இது மேலும் விரிவடைந்தது. இவரும் இவரது மகனும் இவரது ஆட்சிக்காலத்தில் ஆண்டீய மலைத்தொடரின் பெரும்பகுதியை இன்காக்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ The Inca Empire. Created by Katrina Namnama & Kathleen DeGuzman
- ↑ Terence D'Altroy, The Incas, pp. 2–3.
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
- உலக அதிசயம்: மச்சு பிச்சு
- இன்கா நாடு by Hiram Bingham (published 1912–1922 CE).