காந்தி ஜெயந்தி
காந்தி ஜெயந்தி (Gandhi Jayanti) என்பது இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஐக் குறிக்கும் நாளாகும். இது இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய மட்டத்தில் அக்டோபர் 2 இல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜூன் 15, 2007இல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி இந்நாள் "அனைத்துலக வன்முறையற்ற நாளாக அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு (அநுசரிக்கப்பட்டு) வருகிறது[1].
நூற்பு வேள்வி[தொகு]
காந்தி ஜயந்தி: 24 மணி நேர நூற்பு வேள்வி காந்தியடிகள் தமது பிறந்த நாளைக் கொண்டாட விரும்பவில்லை. ஆனால், தலைவர்கள் பலர் வற்புறத்தியதால், ஏழை மக்களின் வாழ்வாதாரமான ராட்டை தினமாகத் தனது பிறந்தநாளைக் கொண்டாட அவர் சம்மதித்ததாகக் கூறப்படுகிறது. [2] [3]
1969 அக்டோபர் 2 அன்று திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்ற காந்திஜி நூற்றாண்டு விழா நூற்பு வேள்வி -ரா. கிருஷ்ணசாமி நாயுடு- பங்குபெற்ற நிகழ்வு.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Chaudhury, Nilova (ஜூன் 15 2007). "October 2 is global non-violence day". hindustantimes.com (Hindustan Times). http://www.hindustantimes.com/storypage/storypage.aspx?id=54580f5e-15a0-4aaf-baa3-8f403b5688fa&&Headline=October+2+is+Int'l+Non-Violence+Day. Retrieved 2007-06-15.
- ↑ தினமணி
- ↑ தினமணி