குடியரசு நாள் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குடியரசு நாள்
Indian Army-Madras regiment.jpeg
2004ஆம் ஆண்டின் குடியரசு நாளில் மதராசு ரெசிமென்ட் படைவீரர்கள் அணிவகுத்துச் செல்லுதல்
கடைபிடிப்போர் இந்தியா
வகை தேசிய நாள்
கொண்டாட்டங்கள் அணிவகுப்புகள், பள்ளிகளில் தேசியக் கொடியேற்றம் மற்றும் இனிப்புகள் வழங்கல், பண்பாட்டு நிகழ்ச்சிகள்
நாள் 26 சனவரி


இந்தியக் குடியரசு நாள் (Republic Day of India) இந்திய ஆட்சிமைக்கான ஆவணமாக இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும்.[1]

இந்த நாளில் 1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர 26 சனவரி தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தியாவின் மூன்று தேசிய விடுமுறைநாட்களில் இதுவும் ஒன்று. நாட்டின் தலைநகர் தில்லியில் இந்தியப் பிரதமர், மறைந்த இந்தியப்படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடுகிறார். கடந்த ஆண்டில் நாட்டுக்கு மிகப்பெரும் சேவை புரிந்த படைவீரர்களுக்கான பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படுகின்றன. மாநிலங்களில் மாநில ஆளுனர் கொடியேற்றுவதுடன் காவலர் அணிவகுப்பையும் அரசுத்துறை மிதவைகளையும் பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் பார்வையிடுகிறார். சிறந்த காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

சிறப்பு விருந்தினர்[தொகு]

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று சிறப்பு விருந்தினர் ஒருவர் அழைக்கபடுவார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Introduction to Constitution of India". Ministry of Law and Justice of India (29 July 2008). பார்த்த நாள் 2008-10-14.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=குடியரசு_நாள்_(இந்தியா)&oldid=1754275" இருந்து மீள்விக்கப்பட்டது