ஜாக் சிராக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யாக் சிராக்


பதவியில்
17 மே 1995 – 16 மே 2007
பிரதமர் அலைன் யுப்பெ
லியோனல் யோசுபின்
யான் பியரி ராஃபாரன்
டொமினிக் டெ வில்பின்
முன்னவர் பான்சுவா மித்தரண்ட்
பின்வந்தவர் நிக்கொலா சார்கோசி

அண்டோராவின் இணை இளவரசர்
பதவியில்
17 மே 1995 – 16 மே 2007
குடியரசுத் தலைவர் பான்சுவா மித்தரண்ட்
பிரதமர் மார்க் ஃபோர்னெ மொல்னெ
ஆல்பர்ட் பின்டட்
முன்னவர் பான்சுவா மித்தரண்ட்
பின்வந்தவர் நிக்கொலா சார்கோசி

பிரான்சின் பிரதமர்
பதவியில்
20 மார்ச்சு 1986 – 10 மே 1988
தலைவர் பான்சுவா மித்தரண்ட்
முன்னவர் லாரன்ட் ஃபாபியசு
பின்வந்தவர் மிசேல் ரோகர்ட்
பதவியில்
27 மே 1974 – 26 ஆகத்து 1976
தலைவர் வலேரி கிசுகர்ட் டி எசுடைங்
முன்னவர் பியரி மெசுமர்
பின்வந்தவர் ரேமண்ட் பாரே

பாரிசு மேயர்
பதவியில்
20 மார்ச்சு 1977 – 16 மே 1995
முன்னவர் புதிய உருவாக்கம்
பின்வந்தவர் யான் டிபெரி

உள்துறை அமைச்சர்
பதவியில்
27 பிப்ரவரி 1974 – 28 மே 1974
பிரதமர் பியரி மெசுமர்
முன்னவர் ரேமண்ட் மார்செல்லன்
பின்வந்தவர் மிசேல் பொனியாடௌசுகி
அரசியல் கட்சி மக்கள் இயக்க சங்கம் (Union for a Popular Movement) (2002–நடப்பு)

பிறப்பு 29 நவம்பர் 1932 (1932-11-29) (அகவை 80)
பாரிசு, பிரான்சு
வாழ்க்கைத்
துணை
பெர்னடெட் சிராக்
பழைய மாணவர் பாரிசு அரசறிவியல் கழகம்
ஆர்வர்ட் பல்கலைக்கழகம்
தேசிய மேலாண்மைப் பள்ளி
துறை பொதுச் சேவை
சமயம் உரோமன் கத்தோலிக்கம்
கையொப்பம் ஜாக் சிராக்'s signature

யாக் ரெனே சிராக் (Jacques René Chirac) (பிறப்பு 29 நவம்பர் 1932) 1995ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை பிரான்சின் அதிபராக பணியாற்றிய ஓர் பிரெஞ்சு அரசியல்வாதி. இதற்கு முன்னர் 1974ஆம் ஆண்டு முதல் 1976 வரையும் 1986ஆம் ஆண்டு முதல் 1988 வரையும் இருமுறை பிரான்சின் பிரதமராக இருந்த பெருமை உடையவர்.1977ஆம் ஆண்டு முதல் 1985 வரை பாரிசின் மேயராகப் பணியாற்றி உள்ளார்.

சிராக் பிரெஞ்சு அதிபராக, பான்சுவா மித்தரண்டிற்கு அடுத்து, மிகுந்த நாட்கள் பணியாற்றிய சாதனையும் புரிந்துள்ளார். முதல்முறை ஏழு ஆண்டுகளும் இரண்டாம் தவணையில் ஐந்து ஆண்டுகளும் முழு பணிக்காலமும் அதிபராக இருந்துள்ளார். அதிபர் என்ற முறையில் அண்டோராவின் பதவிவழி இணை-இளவரசராகவும் பிரெஞ்சு "தேசிய கௌரவ படை"(Légion d'honneur)யின் பதவிவழி கிராண்ட் மாஸ்டராகவும் பணியாற்றினார்.

சிராக் வரிவிகிதங்களைக் குறைத்தார்,விலைக் கட்டுப்பாடுகளை தளர்த்தினார், குற்றம், தீவிரவாதம் புரிந்தவர்களுக்கான தண்டனையைக் கடுமையாக்கினார் மற்றும் வணிக தனியார்மயமாக்கலை ஆதரித்தார்.[1] சமூகத்திற்கு பொறுப்புள்ள பொருளியல் கொள்கைகளை ஆதரித்த இவர் 1995ஆம் ஆண்டு தேர்தலில் "சமூகப் பிளவை"(fracture sociale) குறைக்க வேண்டிய தேவையை எடுத்துக்கூறி வென்றார்.[2] இவரது அரசு கட்டுப்படுத்துகின்ற பொருளியல் வளர்ச்சிக் கொள்கைகள் ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியரின் தாராளமயக் கொள்கைகளுக்கு மாற்றாக இருந்ததைச் சுட்டி அதனை "ஆங்கிலோ-சாக்சன் பெருந்தாராளமயம்" என்றுரைத்தார்.[3]

மேற்கோள்கள் [தொகு]

  1. Privatization Is Essential, Chirac Warns Socialists: Resisting Global Currents, France Sticks to Being French, International Herald Tribune
  2. "Jacques Chirac President of France from 1995–2007". Bonjourlafrance.net. பார்த்த நாள் 20 April 2010.
  3. Giavazzi, Francesco; Alberto Alesina (2006). The Future of Europe: Reform Or Decline. p. 125. 

வெளி இணைப்புக்கள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்_சிராக்&oldid=1358200" இருந்து மீள்விக்கப்பட்டது