யிங்லக் சினாவத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யிங்லக் சினாவத்ரா
ยิ่งลักษณ์ ชินวัตร

தாய்லாந்து பிரதமர்
அறிவிக்கப்பட்ட
பதவியேற்பு
சூலை 2011
அரசர் பூமிபோல் அடுல்யதேஜ்
முன்னவர் அபிஜித் வெஜ்ஜாஜீவா
அரசியல் கட்சி பினி தாய் கட்சி

பிறப்பு 21 சூன் 1967 (1967-06-21) (அகவை 45)
சான் காம்பெங், சியாங் மாய், தாய்லாந்து
வாழ்க்கைத்
துணை
அனுசோம் அமோர்ன்சத்
பிள்ளைகள் சுபாசெக் அமோர்ன்சத்
பழைய மாணவர் சியாங் மாய் பல்கலைக்கழகம்
கென்டக்கி அரசுப் பல்கலைக்கழகம்
சமயம் தேராவட பௌத்தம்

யிங்லக் சினாவத்ரா (Yingluck Shinawatra, தாய்லாந்து:ยิ่งลักษณ์ ชินวัตร}}; பிறப்பு 21 சூன் 1967) தாய்லாந்தின் அரசியல்வாதியும் பினி தாய் கட்சியின் தலைவரும் 2011 தாய் பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து தாய்லாந்தின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்க[[1] உள்ளவருமாவார்.

சியாங் மாயில் பிறந்த யங்லக் பொது நிர்வாகத்தில் பட்டப்படிப்பை சியாங் மாய் பல்கலைக்கழகத்திலும் பட்டமேற்படிப்பை கென்டக்கி அரசுப் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். அவரது அண்ணன் தக்சின் சினாவத்ரா நிறுவிய சின் வர்த்தகக் கழகத்தில் இணைந்து இருபதாண்டுகளில் மனை மேம்படுத்துனர் எஸ்சி அசெட் தலைவராகவும் தாய்லாந்தின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனம் அட்வான்ஸ்டு இன்ஃபோ சர்வீசஸ் மேலாண்மை இயக்குனராகவும் முன்னேறினார். இடையில் தாய்லாந்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த தமையன் தட்சின் ஊழல் புகாரில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற ராணுவ புரட்சியின் போது, தாய்லாந்து நாட்டில் இருந்து தப்பி ஓடி துபாயில் தஞ்சம் அடைந்தார்.

தட்சினுடன் தொடர்ந்த தொடர்பாடலை வைத்துக்கொண்டிருந்த பினி தாய் கட்சி மே 2011 தாய் பொதுத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக யங்லக் சினாவத்ராவின் பெயரை அறிவித்திருந்தது.[2][3] முன்கட்ட முடிவுகளின்படி பினி தாய் கட்சி அமோக வெற்றி பெற்று 500 இடங்கள் உள்ள தாய்லாந்து நாடாளுமன்றத்தில் 263 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. இவ்வாறு ஒரு தனிக்கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறுவது தாய்லாந்து வரலாற்றில் இது இரண்டாம் முறையாகும். திருமதி சினாவத்ரா தாய்லாந்தின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்க உள்ளார்.[4]

மேற்கோள்கள் [தொகு]

  1. http://www.koodal.com/news/world.asp?id=64783&section=tamil&title=yingluck-set-to-become-thai-pm தாய்லாந்து நாட்டில் முதல் பெண் பிரதமர் தேர்வு] கூடல் சூலை 4,2011
  2. Kate, Daniel Ten (16 May 2011). "Sister of Fugitive Ex-Premier Thaksin Chosen as Leader of Opposition Party". Bloomberg L.P.. Bangkok. http://www.bloomberg.com/news/2011-05-16/sister-of-fugitive-ex-premier-thaksin-chosen-as-leader-of-opposition-party.html. 
  3. Hookway, James (17 May 2011). "New Thai Candidacy". The Wall Street Journal (Bangkok). http://online.wsj.com/article/SB10001424052748704281504576326880909513312.html. 
  4. "Yingluck, Pheu Thai win in a landslide" Bangkok Post 3 July 2011

வெளியிணைப்புகள் [தொகு]


அரசியல் அலுவலகம்
முன்னர்
அபிஜித் வெஜ்ஜாஜீவா
தாய்லாந்து பிரதமர்
அறிவிப்பு

2011–இற்றை
இற்றை வரை
"http://ta.wikipedia.org/w/index.php?title=யிங்லக்_சினாவத்ரா&oldid=1362218" இருந்து மீள்விக்கப்பட்டது