சிறிமாவோ பண்டாரநாயக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிறிமாவோ பண்டாரநாயக்கா
சிறிமாவோ பண்டாரநாயக்கா

பதவியில்
நவம்பர் 12, 1994 – நவம்பர் 19, 2005
முன்னிருந்தவர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்கா
பின்வந்தவர் டட்லி சேனநாயக்கா
அரசியல் கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி

பிறப்பு ஏப்ரல் 17, 1917
இலங்கை
இறப்பு அக்டோபர் 10, 2000
கொழும்பு, இலங்கை
வாழ்க்கைத்துணை சொலமன் டயஸ் பண்டாரநாயக்கா

சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்கா (Sirimavo Ratwatte Dias Bandaranaike) (ஏப்ரல் 17, 1916 - அக்டோபர் 10, 2000) இலங்கையின் ஓர் அரசியல்வாதியாவார். இவர் இலங்கையின் பிரதம மந்திரியாக மூன்று முறை, 1960-1965, 1970-1977 மற்றும் 1994-2000 ஆகிய காலப்பகுதிகளில் பதவியில் இருந்தவர். இவரே உலகிலேயே முதலாவது பெண் பிரதமருமாவார். இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்தவர். இவரது கணவர் மறைந்த முன்னாள் இலங்கை பிரதமர் சொலமன் பண்டாரநாயக்கா. மகள் சந்திரிக்கா பண்டாரநாயக்கா இலங்கையின் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாக இருந்தவர். இவரது ஏனைய மக்கள் அநுரா பண்டாரநாயக்கா, சுனேத்திரா பண்டாரநாயக்கா ஆகியோர்.

[தொகு] அரசியல் பின்னணி

தனது கணவர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா கொல்லப்பட்டபின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். ஜூலை 21, 1960 இல் முதன் முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1965 இல் நடந்த பொதுத்தேர்தலில் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து 1970 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கட்சியை வழி நடாத்தினார். 1970 பொதுத்தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து பெரும் வெற்றி பெற்று இரண்டாம் முறை மீண்டும் பிரதமரானார். 1977 இல் நடந்த தேர்தலில் கட்சி படு தோல்வி அடைந்தது. 1980 இல் அன்றைய ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் ஆட்சியினால் ஊழல் குற்றச்சாட்டுகளில் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு குடியுரிமை பறிக்கப்பட்டு ஏழு வருடங்களுக்கு அரச பதவிகளை ஏற்கத் தடை செய்யப்பட்டார்.

அரச அலுவலகங்கள்
முன்னிருந்தவர்
சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க
இலங்கை பிரதமர்
1994–2000
பின் வந்தவர்
ரட்னசிறி விக்கிரமநாயக்கா
முன்னிருந்தவர்
டட்லி சேனநாயக்கா
இலங்கை பிரதமர்
1970–1977
பின் வந்தவர்
ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
முன்னிருந்தவர்
டட்லி சேனநாயக்கா
இலங்கை பிரதமர்
1960–1965
பின் வந்தவர்
டட்லி சேனநாயக்கா


பா    தொ
இலங்கையின் பிரதமர்கள் {{{படிம தலைப்பு}}}
டி. எஸ். சேனநாயக்காடட்லி சேனநாயக்காஜோன் கொத்தலாவலைஎஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காடபிள்யூ தகநாயக்காசிறிமாவோ பண்டாரநாயக்காஜே. ஆர். ஜெயவர்த்தானாரணசிங்க பிரேமதாசாடி. பி. விஜயதுங்காரணில் விக்கிரமசிங்கசந்திரிகா பண்டாரநாயக்காஇரத்னசிறி விக்கிரமநாயக்காமகிந்த ராஜபக்ச
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்