1930
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1900கள் 1910கள் 1920கள் - 1930கள் - 1940கள் 1950கள் 1960கள் |
| ஆண்டுகள்: | 1927 1928 1929 - 1930 - 1931 1932 1933 |
| 1930 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1930 MCMXXX |
| திருவள்ளுவர் ஆண்டு | 1961 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2683 |
| சீன நாட்காட்டி | 4626-4627 |
| எபிரேய நாட்காட்டி | 5689-5690 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1985-1986 1852-1853 5031-5032 |
| இரானிய நாட்காட்டி | 1308-1309 |
| இசுலாமிய நாட்காட்டி | 1348 – 1349 |
| ரூனிக் நாட்காட்டி | 2180
|
1930 (MCMXXX) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜனவரி 26 - இந்திய தேசிய காங்கிரஸ் ஜனவரி 26 ம் நாளை விடுதலை நாளாக (பூரண சுயராஜ்யம்) அறிவித்தது.
- பெப்ரவரி 18 - கிளைட் டொம்பா (Clyde Tombaugh) புளூட்டோவைக் கண்டறிந்தார்.
- மார்ச் 12 - மகாத்மா காந்தி உப்புச் சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்தார்.
- மார்ச் 28 - கொன்ஸ்டன்டீனபில், அங்கோரா ஆகியன இஸ்தான்புல் மற்றும் அங்காரா எனப் பெயர் மாற்றம் பெற்றன.
- ஏப்ரல் 18 - பிபிசி வானொலி தனது வழமையான செய்தி அறிக்கையில் இந்நாளில் "எந்த செய்திகளும் இல்லை" என அறிவித்தது.
- மே 4/மே 5 - மகாத்மா காந்தி மீண்டும் கைதானார்.
- மே 6 - இரானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 4,000 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜூன் 6 - வீரகேசரி நாளிதழ் தொடங்கப்பட்டது.
- ஜூலை 13 - முதலாவது உலகக் கோப்பை காற்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமாயின. லூசியென் லோரென்ட் பிரான்சுக்காக மெக்சிகோவுக்கு எதிராக முதலாவது கோலைப் போட்டார்.
- ஜூலை 30 - முதலாவது உலகக் கோப்பை காற்பந்தாட்டப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் உருகுவே ஆர்ஜெண்டீனாவை 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
- ஆகஸ்ட் 27 - பெருவில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
- டிசம்பர் - துருக்கியில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.
- டிசம்பர் 28 - மகாத்மா காந்தி பேச்சுவார்த்தைகளுக்காக பிரித்தானியா சென்றார்.
நாள் அறியப்படாதவை [தொகு]
- நியூத்திரன் கண்டுபிடிக்கப்பட்டது.
- அப்காசியா, ஜோர்ஜியா ஆகியன இணைந்தன.
பிறப்புகள் [தொகு]
- ஏப்ரல் 13 - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாடலாசிரியர் (இ. 1959)
- ஆகஸ்ட் 5 - நீல் ஆம்ஸ்ட்றோங், சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதர்
- அக்டோபர் 10 - ஹரோல்ட் பிண்டர், நோபல் பரிசு பெற்ற ஆங்கில எழுத்தாளர் (இ. 2008)
இறப்புகள் [தொகு]
- ஜூலை 7 - ஆர்தர் கொனன் டொயில், எழுத்தாளர் (பி. 1859)
- நவம்பர் 26 - சேர் பொன்னம்பலம் இராமநாதன், இலங்கையின் தேசியத் தலைவர் (பி. 1851)
நோபல் பரிசுகள் [தொகு]
- இயற்பியல் - சி. வி. இராமன்
- வேதியியல் - ஹான்ஸ் ஃபிஷர்
- மருத்துவம் - கார்ல் லாண்ட்ஸ்டெய்னெர்
- இலக்கியம் - சிங்கிளையர் லூயிஸ்
- அமைதி - Archbishop Lars Olof Nathan Söderblom