ஆகஸ்டு 9
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆகஸ்ட் 9 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | ஆகஸ்ட் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
| MMXIII | ||||||
ஆகஸ்டு 9 கிரிகோரியன் ஆண்டின் 221வது நாளாகும். நெட்டாண்டுகளில் 222வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 144 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- கிமு 48 - ஜூலியஸ் சீசர் பம்பீயை சமரில் தோற்கடித்தான். பம்பீ எகிப்துக்கு தப்பி ஓடினான்.
- 378 - ரோமப் பேரரசன் வேலென்ஸ் தலைமையிலான பெரும் படை எகிப்தில் தோல்வியடைந்தது. மன்னனும் அவனது பாதிப்பங்குப் படையினரும் கொல்லப்பட்டனர்.
- 1048 - 23 நாட்களே பதவியில் இருந்த பின்னர் திருத்தந்தை இரண்டாம் டமாசஸ் இறந்தார்.
- 1173 - பீசா சாயும் கோபுரத்தின் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இது இரு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே முடிவுற்றது.
- 1655 - ஒலிவர் குரொம்வெல் பிரபு இங்கிலாந்தை ஒன்பது மாகாணங்களாகப் பிரித்தார்.
- 1842 - ஐக்கிய அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் ரொக்கி மலைகளின் கிழக்குப் பகுதியில் எல்லைகளுக்கான உடன்பாடு எட்டப்பட்டது.
- 1892 - தோமஸ் அல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1902 - ஏழாம் எட்வேர்ட் ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடிசூடினான்.
- 1902 - யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் ரோமன் கத்தோலிக்க ஆலயம் ஒன்றும் பாடசாலை ஒன்றும் இந்துக்களால் தாக்கி அழிக்கப்பட்டன.
- 1907 - இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆகஸ்ட் 1 இல் ஆரம்பிக்கப்பட்ட சாரணிய இயக்கத்தின் முதல் பாசறை முடிவடைந்தது.
- 1942 - வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் துவக்கியதற்காக மகாத்மா காந்தி உட்படப் பல இந்திய காங்கிரஸ் தலைவர்கள் பம்பாயில் கைது செய்யப்பட்டார்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய நகரான நாகசாக்கியின் மீது ஐக்கிய அமெரிக்கா வீசிய கொழுத்த மனிதன் எனப் பெயரிடப்பட்ட அணுகுண்டு 70,000 முதல் 90,000 வரையான பொதுமக்களை அதே இடத்தில் கொன்றது.
- 1965 - சிங்கப்பூர் மலேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனி நாடாகியது.
- 1965 - ஆர்கன்சசில் டைட்டான் ஏவுகணைத் தளத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 53 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
- 1974 - வாட்டர்கேட் ஊழல்: அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் பதவி விலகினார்.
- 1991 - யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் ஜூலை 10இல் ஆரம்பித்த ஆனையிறவு இராணுவ முகாமின் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது. இச்சமரில் 604 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். எனினும் 2000ம் ஆண்டில் மீளத் தாக்குதல் மேற்கொண்டு தளத்தைக் கைப்பற்றினர்.
- 2006 - திருகோணமலைப் பகுதியில் தமிழ் மக்கள் வெருகல் ஊடாக இடம் பெயர்ந்தபோது விமானத் தாக்குதலுக்குள்ளாகியும் எறிகணைத் தாக்குதலாலும் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள் [தொகு]
- 1776 - அமேடியோ அவகாதரோ, இத்தாலிய வேதியியலாளர் (இ. 1856)
- 1974 - மகேஷ் பாபு, தெலுங்கு திரைப்பட நடிகர்
இறப்புகள் [தொகு]
- 1962 - ஹேர்மன் ஹெசே, நோபல் பரிசு பெற்ற ஜேர்மனிய எழுத்தாளர் (பி. 1877)
- 1969 - செசில் பிராங்க் பவெல், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய இயற்பியலாளர் (பி. 1903)
- 1975 - திமீத்ரி சொஸ்தகோவிச், ரஷ்ய இசையமைப்பாளர் (பி. 1906)
- 2000 - ஜோன் ஹர்சானி, நோபல் பரிசு பெற்ற ஹங்கேரிய பொருளியலாளர் (பி. 1920)
சிறப்பு நாள் [தொகு]
- சிங்கப்பூர் - விடுதலை நாள் (1965)
- தென்னாபிரிக்கா - தேசிய பெண்கள் நாள்