1655
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 16ம் நூ - 17ம் நூ - 18ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1620கள் 1630கள் 1640கள் - 1650கள் - 1660கள் 1670கள் 1680கள் |
| ஆண்டுகள்: | 1652 1653 1654 - 1655 - 1656 1657 1658 |
| 1655 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1655 MDCLV |
| திருவள்ளுவர் ஆண்டு | 1686 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2408 |
| சீன நாட்காட்டி | 4351-4352 |
| எபிரேய நாட்காட்டி | 5414-5415 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1710-1711 1577-1578 4756-4757 |
| இரானிய நாட்காட்டி | 1033-1034 |
| இசுலாமிய நாட்காட்டி | 1065 – 1066 |
| ரூனிக் நாட்காட்டி | 1905
|
1655 (MDCLV) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- ஜனவரி 5 - கோ-சாய் என்பவன் ஜப்பானின் மன்னனானான்.
- மார்ச் 25 - சனிக் கோளின் மிகப் பெரிய சந்திரனான "டைட்டான்" கிறிஸ்டியன் ஹுயிஜென்ஸ் என்பவரால் கண்டறியப்பட்டது.
- மே 10 ஆங்கிலேயப் படைகள் ஜமெய்க்காவை அடைந்தன.
- ஜூலை 29 - ஆம்ஸ்டர்டாமில் உலகின் மிகப்பெரும் நகரசபை அமைக்கப்பட்டது.
- ஜூலை 31 - ரஷ்ய இராணுவம் லித்துவேனியாவின் வில்நியூஸ் நகரைக் கைப்பற்றியது.
- ஆகஸ்ட் 9 - ஒலிவர் குரொம்வெல் பிரபு இங்கிலாந்தை ஒன்பது மாகாணங்களாகப் பிரித்தார்.
- செப்டம்பர் 8 - சுவீடனின் காரெல் பத்தாம் குஸ்டாவ் மன்னன் போலந்தின் வார்சா நகரைப் பிடித்தான்.
- அக்டோபர் 15 - போலந்தின் லூம்லின் நகரில் இருந்த யூதர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 19 - சுவீடனின் காரெல் பத்தாம் குஸ்டாவ் மன்னன் போலந்தின் கிராக்கோவ் நகரைப் பிடித்தான்.
- நவம்பர் 3 - பிரான்சும் இங்கிலாந்தும் இராணுவா பொருளாதார ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
- டிசம்பர் 10 - யாழ்ப்பாண ஆளுநர் "அன்டோனியோ டி மெனேசா" மன்னாரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் "முகத்துவாரம்" என்னும் இடத்தில் டச்சுக்காரரினால் சிறைப்பிடிக்கப்பட்டான்.
நாள் அறியப்படாதவை[தொகு]
- டில்லி ஜும்மா மசூதி கட்டி முடிக்கப்பட்டது.