டிசம்பர் 5
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | டிசம்பர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
| MMXIII | ||||||
டிசம்பர் 5 கிரிகோரியன் ஆண்டின் 339வது நாளாகும். நெட்டாண்டுகளில் 340வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 26 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1082 - பார்சிலோனா மன்னன் இரண்டாம் ரமோன் பெரெங்கெர் கொல்லப்பட்டான்.
- 1360 - பிரெஞ்சு நாணயம் பிராங்க் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1492 - கொலம்பஸ் ஹிஸ்பனியோலா தீவை அடைந்தார். இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் இவரே.
- 1497 - போர்த்துக்கல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான்.
- 1746 - ஸ்பானிய ஆட்சிக்கெதிராக ஜெனோவாவில் கிளர்ச்சி ஆரம்பமானது.
- 1848 - கலிபோர்னியாவில் பெருமளவு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் போக் அறிவித்தார்.
- 1893 - மின்சாரத்தில் இயங்கும் தானுந்து அறிமுகமானது.
- 1896 - சென்னை கன்னிமாரா பொது நூலகம் ஆளுநர் சர் ஆர்தர் ஹாவ்லக் என்பவரால் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது.
- 1933 - யூட்டா 36வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
- 1934 - இத்தாலியப் படைகள் அபிசீனியாவின் வால் வால் நகரத்தைத் தாக்கினர்.
- 1936 - சோவியத் ஒன்றியம் தனது புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. கிர்கிஸ்தான் சோவியத் ஒன்றியத்திற்குள் முழுமையான குடியரசாக அறிவிக்கப்பட்டது.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து, ஹங்கேரி, ருமேனியா நாடுகளின் மீது பிரித்தானியா போரை அறிவித்தது.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: கியோர்கி சூக்கொவ் தலைமையில் சோவியத் படைகள் ஜெர்மனிய ஆக்கிரமிப்புக்க்கு எதிராக மாஸ்கோவில் பெரும் தாக்குதலைத் தொடுத்தனர்.
- 1957 - இந்தோனீசியாவில் இருந்து அனைத்து 326,000 டச்சு மக்களும் வெளியேற்றப்பட்டனர்.
- 1958 - STD தொலைபேசி இணைப்பு சேவை ஐக்கிய இராச்சியத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் ஆரம்பிக்கப்பட்டது.
- 1969 - அமெரிக்க படைத்துறை உயர் ஆய்வு நிறுவனத்தால் இணையம் நிறைவேறியது.
- 1969 - மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை லைஃப் இதழ் வெளியிட்டது.
- 1978 - சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானுடன் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
- 1983 - ஆர்ஜெண்டீனாவில் இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது.
- 1995 - இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து தாம் முழுமையாகக் கைப்பற்றியதாக அறிவித்தது.
- 2003 - தெற்கு ரஷ்யாவில் தொடருந்து ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்டனர்.
- 2003 - இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் குளிர்திரவ ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருப்பதாக அறிவித்தது.
- 2006 - பிஜியில் இராணுவப் புரட்சி மூலம் அதன் இராணுவத் தளபதி வொரெக் பைனிமரமா அரசைக் கைப்பற்றினார்.
- 2006 - இந்திய நடுவண் அரசில் நிலக்கரித்துறை அமைச்சராக இருந்த சிபு சோரன் 1994 இல் அவரது உதவியாளரைக் கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
பிறப்புக்கள் [தொகு]
- 1782 - மார்ட்டின் வான் பியூரன், ஐக்கிய அமெரிக்காவின் 8வது குடியரசுத் தலைவர் (இ. 1848)
- 1901 - வால்ட் டிஸ்னி, உலகப் புகழ் பெற்ற ஓவியர் (இ. 1966)
- 1901 - வேர்னர் ஐசன்பேர்க், ஜெர்மனிய இயற்பியலாளரும், நோபல் பரிசு பெற்றவரும் (இ. 1976)
- 1966 - தயாநிதி மாறன், இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறையின் நடுவண் அமைச்சர்
- 1985 - ஜாஷ் ஸ்மித், அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர்
இறப்புகள் [தொகு]
- 1791 - மோட்ஸார்ட், ஐரோப்பிய செவ்வியல் இசையமைப்பாளர் (பி. 1756)
- 1879 - ஆறுமுக நாவலர், ஈழத்தின் சைவ ஆன்மீகவாதி, தமிழ் உரைநடையின் தந்தை, (பி. 1822)
- 1926 - குளோட் மொனே, பிரெஞ்சு ஓவியர் (பி. 1840)
- 1950 - ஸ்ரீ அரவிந்தர், இந்திய ஆன்மீகவாதி, (பி. 1872)
- 1954 - கல்கி கிருஷ்ணமூர்த்தி, தமிழ் எழுத்தாளர் (பி. 1899)
சிறப்பு நாள் [தொகு]
- தாய்லாந்து - தேசிய நாள், தந்தையர் நாள்.
- பெல்ஜியம், செக் குடியரசு, நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம் - புனித நிக்கலஸ் மாலை.