ஜனவரி 13
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | சனவரி 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
| MMXIII | ||||||
ஜனவரி 13 கிரிகோரியன் ஆண்டின் 13வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 352 (நெட்டாண்டுகளில் 353) நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1610 - கலிலியோ கலிலி வியாழனின் 4வது துணைக்கோளைக் கண்டுபிடித்தார்.
- 1658 - இங்கிலாந்தின் இராணுவ மற்றும் அரசியல் தலைவருமான ஒலிவர் குரொம்வெல்லுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய எட்வார்ட் செக்ஸ்பி என்பவன் லண்டன் கோபுர சிறையில் இறந்தான்.
- 1830 - லூசியானாவில் நியூ ஓர்லீன்ஸ் நகரில் பெரும் தீ பரவியது.
- 1840 - லோங் தீவில் லெக்சிங்டன் என்ற நீராவிக்கப்பல் மூழ்கியதில் 139 பேர் கொல்லப்பட்டனர்.
- 1847 - கலிபோர்னியாவில் மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் காகுவெங்கா என்ற இடத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
- 1908 - பென்சில்வேனியாவில் ரோட்ஸ் ஒப்பேரா மாளிகையில் தீப்பிடித்ததில் 171 பேர் கொல்லப்பட்டனர்.
- 1915 - இத்தாலியின் அவசானோ பிரதேசத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 29,800 பேர் கொல்லப்பட்டனர்.
- 1930 - மிக்கி மவுஸ் கார்ட்டூன் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத்தொடங்கியது.
- 1938 - இங்கிலாந்து திருச்சபை சார்ல்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டது.
- 1939 - அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் 20,000 சதுர கிமீ நிலம் காட்டுத்தீயினால் அழிந்தது. 71 பேர் கொல்லப்பட்டனர்.
- 1942 - ஹென்றி போர்ட் பிளாஸ்டிக்கினால் ஆன தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1953 - யூகொஸ்லாவியாவின் தலைவராக மார்ஷல் ஜோசிப் டீட்டோ தெரிவு செய்யப்பட்டார்.
- 1964 - கல்கத்தாவில் இந்து-முஸ்லிம் கலவரம் மூண்டதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
- 1972 - கானாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
- 1982 - வாஷிங்டன், டிசியில் விமானம் ஒன்று பாலம் ஒன்றில் வீழ்ந்து நொருங்கியதில் 78 பேர் கொல்லப்பட்டனர்.
- 1985 - எதியோப்பியாவில் பயணிகள் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 428 பேர் கொல்லப்பட்டனர்.
- 1991 - சோவியத் படைவீரர்கள் லித்துவேனியாவில் சோவியத் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட பொதுமக்களைத் தாக்கி 14 பேரைக் கொன்றனர்.
- 1992 - இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்களை பாலியல் அடிமைகளாக கட்டாயமாக சிறைப்படுத்தி வைத்திருந்தமைக்காக ஜப்பான் மன்னிப்புக் கோரியது.
- 2001 - எல் சல்வடோரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 800 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 சீனாவின் தென் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 13,000 வீடுகள் இடிந்து தரை மாட்டமாயின.
பிறப்புகள் [தொகு]
- 1864 - வில்ஹெம் வியென், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 1928)
- 1879 - மெல்வின் ஜோன்ஸ், அரிமா சங்கத்தை அமெரிக்கர் (இ. 1961)
- 1911 - ஆனந்த சமரக்கோன், சிங்கள இசைக்கலைஞர் (இ. 1962)
- 1927 - சிட்னி பிரென்னர், நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர்
- 1946 - ஆர். பாலச்சந்திரன், கல்வியாளர், கவிஞர் (இ. 2009)
- 1949 - ராகேஷ் சர்மா, விண்வெளியில் பறந்த முதல் இந்தியர்.
இறப்புகள் [தொகு]
- 1906 - அலெக்சாண்டர் பப்போவ், ரஷ்ய இயற்பியலாளர் (பி. 1859)
- 1941 - ஜேம்ஸ் ஜோய்ஸ், ஐரிய எழுத்தாளர் (பி. 1882)