கண்டி இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இலங்கை
கண்டி இராச்சியம்
Flag of Ceylon.svg
 
Flag of the Dutch East India Company.svg
1581 – 1815 British Ceylon flag.png

கண்டி இராச்சியம் கொடி

1815 வரை கண்டி அரசரின் கொடி

தலைநகரம் கண்டி
மொழி(கள்) சிங்களம், தமிழ்
அரசு முடியாட்சி
கண்டி இராசதானி
 - 1581-1593 முதலாம் இராஜசிங்கன்
 - 1591-1604 முதலாம் விமலதர்மசூரிய
 - 1605-1635 செனரத்
 - 1629-1687 இரண்டாம் இராஜசிங்கன்
 - 1687-1707 இரண்டாம் விமலதர்மசூரிய (5வது)
 - 1798-1815 ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (8வதும் கடைசியும்)
வரலாறு
 - இலங்கை ஒற்றை ஆட்சிக்கு கீழ் வருகை 1581
 - கண்டி ஒப்பந்தம் மார்ச் 5, 1815

கண்டி இராச்சியம் (Kingdom of Kandy), இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 1815 ஆம் ஆண்டில் பிரித்தானியரால் கைப்பற்றப்படும் வரை இருந்த ஓர் இராச்சியமாகும். இதன் வரலாறு, 1337 தொடக்கம் 1374 வரை அரசு புரிந்த மூன்றாம் விக்கிரமபாகு, இன்று கண்டி என்று அழைக்கப்படும் செங்கடகல நகரை உருவாக்கியதுடன் தொடங்குகின்றது.

பொருளடக்கம்

ஆட்சி முறை [தொகு]

கண்டியின் ஆட்சி முறைக்கமைய நாட்டின் அனைத்துத் துறைகளினதும் அதிபதி மன்னன் ஆவான். அவன் இலங்கேஸ்வர, திரிசிங்கலாதீஸ்வர எனவும் அழைக்கப்பட்டான். நாட்டின் அனைத்துப் பகுதிகளும் இவனுக்கு சொந்தம் ஆகையால் பூபதி எனவும் அழைக்கப்பட்டான். மன்னன் அனைத்து அதிகாரமும் உடையவனாயினும் அவன் பிக்குகளினதும், பிரதான அதிகாரிகளினதும் ஆலோசனைக்கேற்ப செயற்படவேண்டும்.[1]

எல்லைகள் [தொகு]

கண்டி இராச்சியம் (1658- 1815) அமையப்பெற்ற மத்திய மலைநாடானது மலைகளாலும்,ஆறுகளாலும்,காடுகளாலும்,நீர்நிலைகளாலும் சூழப்பட்டிருந்தது.இது சிறப்பான காலநிலையை கொண்டிருந்தது. இது கண்டியின் சுதந்திரத்தை மூன்று நூற்றாண்டுகளாக பேண உதவியது. கண்டி இராச்சியம் ஆரம்பகாலத்தில் ஐந்து பிரதேசங்களை உள்ளடக்கியிருந்தது.

     சிதுருவான        - உடுநுவர ,உட பலாத்த
பலவிட்ட - ஹரிஸ்பத்துவ
மாத்தளை - மாத்தளை
தும்பறை - தும்பறை
சகமதுன்றட்ட - வலப்பன , ஹெவாஹெட்ட

அரச சபை [தொகு]

கண்டி இராச்சிய நிர்வாக முறையின் முக்கிய அலகாக அமைந்த அரச சபையில் கீழ்வரும் நிர்வாகிகள் அங்கம் பெற்றிருந்தனர்.

 *மகா அதிகாரங்கள்
 *திசாவைமார்
 *ரட்டேமகாத்மயாமார்
 *வரித்துறைச் செயலாளர்கள்

கண்டியை ஆண்ட அரசர்கள் [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

  1. இலங்கை கல்வியமைச்சு வெளியிட்ட தரம் எட்டு வரலாற்று பாடநூல்
"http://ta.wikipedia.org/w/index.php?title=கண்டி_இராச்சியம்&oldid=1414691" இருந்து மீள்விக்கப்பட்டது