சேனா சம்மத விக்கிரமபாகு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சேனா சம்மத விக்கிரமபாகு | |
|---|---|
| கண்டியின் அரசன் | |
| ஆட்சிக்காலம் | 1473-1511 |
| பின்வந்தவர் | ஜயவீர |
| வாரிசுகள் | ஜயவீர |
சேனா சம்மத விக்கிரமபாகு (Sena Sammatha Wickramabahu, சிங்களம்: සේනාසම්මත වික්රමබාහු) என்பவர் 1473ஆம் ஆண்டிலிருந்து 1511ஆம் ஆண்டு வரை கண்டி இராச்சியத்தை ஆட்சி செய்த மன்னர் ஆவார்.[1] இவரே 1469ஆம் ஆண்டில் கோட்டை இராச்சியத்துக்கு எதிராகக் கிளர்ச்சி மேற்கொண்டு கண்டி இராச்சியத்தை உருவாக்கியவர். இவரே கண்டி இராச்சியத்தின் முதல் மன்னர்.[2] இவருக்குப் பின் இவருடைய வாரிசான ஜயவீர ஆட்சிக்கு வந்தார்.
ஆட்சிப் பிரதேசங்கள் [தொகு]
இவருடைய ஆட்சிக் காலத்தில் கண்டி இராச்சியத்தின் கீழ் கம்பளை, சிதுறுவன, தெநுவர, பலவிட, மாத்தளை, பன்சிய பத்துவ, ஊவா முதலிய பிரதேசங்கள் இருந்து வந்தன.[3]