2016
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 20ம் நூ - 21ம் நூ - 22ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1980கள் 1990கள் 2000கள் - 2010கள் - 2020கள் 2030கள் 2040கள் |
| ஆண்டுகள்: | 2013 2014 2015 - 2016 - 2017 2018 2019 |
| 2016 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 2016 MMXVI |
| திருவள்ளுவர் ஆண்டு | 2047 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2769 |
| சீன நாட்காட்டி | 4712-4713 |
| எபிரேய நாட்காட்டி | 5775-5776 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2071-2072 1938-1939 5117-5118 |
| இரானிய நாட்காட்டி | 1394-1395 |
| இசுலாமிய நாட்காட்டி | 1437 – 1438 |
| ரூனிக் நாட்காட்டி | 2266
|
2016 ஆம் ஆண்டு (MMXVI) ஆனது கிரிகோரியன் நாள்காட்டியின் படி வெள்ளிக் கிழமையில் தொடங்கக் கூடிய ஒரு நெட்டாண்டாக இருக்கும். இது கி.பி. 2016ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 16ஆம் ஆண்டாகவும் 21ஆம் நூற்றாண்டின் 16ஆம் ஆண்டாகவும் இருக்கும். மேலும் 2010களின் ஏழாம் ஆண்டாகவும் இருக்கும்.
எதிர்வு கூறப்படும் நிகழ்வுகள் [தொகு]
- மே 9 – புதன் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்லும். கதிரவ விட்டங்கடப்பு
- ஆகஸ்டு 5–ஆகஸ்டு 21 – பிரேசில் நாட்டின் ரியோ டி ஜனேரோ நகரில் 2016ஆம் ஆண்டிற்கான கோடைக் கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன.
- செப்டம்பர் 7–செப்டம்பர் 18 – பிரேசில் நாட்டின் ரியோ டி ஜனேரோ நகரில் 2016ஆம் ஆண்டிற்கான கோடைக் கால பாராலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன.
நாள் தெரியாதவை [தொகு]
- 2016ஆம் ஆண்டின் ஐரோப்பியக் கலாச்சாரத் தலைநகரங்கள் - போலந்து நாட்டிலிருந்தும் எசுப்பானிய நாட்டிலிருந்தும் 2016ஆம் ஆண்டிற்கான கலாச்சாரத் தலைநகரங்களாக இரு நகரங்களை ஐரோப்பிய ஒன்றியம் தேர்வு செய்துள்ளது.
- பன்னாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வுலை (ஆங்கிலம்: ITER) உலகின் இரண்டாவது மிகப்பெரிய அறிவியல் ஆய்வைச் செய்ய உள்ளது. இதில் அணுக்கரு இணைவைப் பயன்படுத்தி முதன்முறையாக ஆற்றல் உற்பத்தி செய்யப்படப் போகிறது.
- உருடால்ஃ ஹெஃப் தொடர்பான கோப்புகள் பொதுவெளியில் விடப்படும்
- 2011 இல் செலுத்தப்பட்ட நாசாவின் ஜூனோ விண்கலம் வியாழனின் சுற்றுவட்டத்தை ஆகஸ்ட் மாதத்தில் அடையும்.
- ஓர் உருசிய நிறுவனம் ஆனது விண்வெளி விடுதியை ஏவ உள்ளது. இது விண்வெளி செல்லும் சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு உதவும் நோக்கத்தைக் கொண்டது.
- உலகின் மிகப்பெரிய தொங்குபாலம் ஆனது சிசிலிக்கும் இத்தாலிக்கும் இடையில் கட்டப்பட்டு முடிவடைந்திருக்கும்.