மார்ச் 29
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | மார்ச் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||
| MMXIII | ||||||
மார்ச் 29 கிரிகோரியன் ஆண்டின் 88ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 89ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 277 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1632 - கியூபெக் ஆங்கிலேயரிடம் இருந்து பிரெஞ்சுக்களிடம் கைமாறியது.
- 1792 - 13 நாட்களின் முன்னால் சுடப்பட்ட சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் மன்னன் இறந்தான்.
- 1807 - 4 வெஸ்டா என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான சிறுகோளை ஜெர்மானிய வானியலாளர் ஹைன்ரிக் ஓல்பர்ஸ் கண்டுபிடித்தார்.
- 1831 - துருக்கிக்கு எதிராக பொஸ்னிய எழுச்சி ஆரம்பமானது.
- 1849 - பஞ்சாபை ஐக்கிய இராச்சியம் கைப்பற்றியது.
- 1857 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார். இதுவே பின்னர் இந்திய விடுதலைப் போருக்கு முன்னோடியாக அமைந்தது.
- 1867 - கனடாக் கூட்டமைப்பை ஜூலை 1 இல் உருவாக்குவதற்கான பிரித்தானிய வட அமெரிக்க சட்டத்தை பிரித்தானியாவின் விக்டோரியா மகாராணி அரச ஒப்புதலை அளித்தார்.
- 1879 - ஆங்கிலோ-சூலு போர்: தென்னாபிரிக்காவில் கம்பூலா என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் 20,000 சூலுக்களை வென்றனர்.
- 1886 - ஜோர்ஜியாவின் அட்லாண்டாவில் ஜோன் பெம்பேர்ட்டன் என்பாவர் முதல் தொகுதி கொக்கக் கோலா மென்பானத்தைத் தயாரித்தார்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: வி-1 பறக்கும் குண்டு கடைசித் தடவையாக இங்கிலாந்தைத் தாக்கியது.
- 1971 - மை லாய் படுகொலைகள்: அமெரிக்காவின் லெப்டினண்ட் வில்லியம் கலி என்பவன் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றான்.
- 1973 - வியட்நாம் போர்: அமெரிக்கப் படைகள் தெற்கு வியட்நாமை விட்டு முற்றாக வெளியேறினர்.
- 1974 - நாசாவின் மரைனர் 10 விண்கலம் புதன் கோளை அண்மித்த முதலாவது விண்கலம் என்ற பெயரைப் பெற்றது.
- 2004 - பல்கேரியா, எஸ்தோனியா, லாத்வியா, லித்துவேனியா, ருமேனியா, சிலவாக்கியா, சிலொவேனியா ஆகியன நேட்டோ அமைப்பில் முழுமையான அங்கத்துவம் பெற்றன.
- 2004 - அயர்லாந்து புகைத்தலை உணவகங்கள் உட்பட எல்லா வேலையிடங்களிலும் தடை செய்த முதல்நாடானது.
- 2005 - யாஹூ! 360° சேவை ஆரம்பிக்கப்பட்டது.
- 2007 - கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நோர்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.
- 2008 - பூமி மணித்தியாலம் அனைத்துலக மயப்படுத்தப்பட்டது.
பிறப்புக்கள் [தொகு]
- 1790 - ஜான் டைலர், 10வது அமெரிக்க ஜனாதிபதி (இ. 1862)
- 1918 - சாம் வோல்ற்றன், அமெரிக்க விற்பனை நிறுவனங்களான வோல் மார்ட், சாம்ஸ் கிளப் ஆகியவற்றின் நிறுவனர் (இ. 1992)
- 1927 - ஜோன் வேன், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (இ. 2004)
- 1941 - ஜோசப் டெய்லர், இளையவர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
இறப்புக்கள் [தொகு]
- 1985 - ஜார்ஜ் பீட்டர் மர்டாக், மானிடவியலாளர் (பி. 1897)
- 2000 - சி. கே. சரஸ்வதி, தமிழ்த் திரைப்பட நடிகை