மார்ச் 14
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மார்ச்சு 14 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | மார்ச் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||
| MMXIII | ||||||
மார்ச் 14 கிரிகோரியன் ஆண்டின் 73ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 74ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 292 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1489 - சைப்பிரஸ் மகாராணி கத்தரீன் கோர்னாரோ தனது இராச்சியத்தை வெனிஸ் நகருக்குக் விற்றார்.
- 1794 - எலி விட்னி பஞ்சைத் தூய்மைப்படுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கும் காட்டன் ஜின் என்ற இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1898 - டாக்டர் வில்லியம் கப்ரியேல் றொக்வூட், இலங்கையின் அரசியல் நிர்ணய சபைக்கு தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
- 1926 - கோஸ்ட்டா ரிக்காவில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 248 பேர் கொல்லப்பட்டனர்.
- 1939 - செக்கோசிலவாக்கியாவின் பொஹேமியா மற்றும் மொராவியா மாகாணங்களை ஜேர்மனியப் படைகள் ஆக்கிரமித்தனர்.
- 1951 - கொரியப் போர்: இரண்டாவது முறையாக ஐ.நா படைகள் சியோல் நகரைக் கைப்பற்றியது.
- 1978 - இஸ்ரேலியப் படைகள் தெற்கு லெபனானை ஆக்கிரமித்துக் கைப்பற்றியது.
- 1979 - சீனாவில் பெய்ஜிங் நகரில் விமானம் ஒன்று தொழிற்சாலை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
- 1984 - சின் ஃபெயின் தலைவர் ஜெரி ஆடம்ஸ் பெல்ஃபாஸ்ட் நகரில் கொலை முயற்சி ஒன்றில் படுகாயமடைந்தார்.
- 1994 - லினக்ஸ் கரு (kernel) 1.0.0 வெளியிடப்பட்டது.
- 1995 - ரஷ்ய விண்கப்பல் ஒன்றில் அமெரிக்கர் (நோர்மன் தகார்ட்) ஒருவர் முதன் முதலாகப் பயணித்தார்.
- 1998 - தெற்கு ஈரானில் 6.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியது.
- 2007 - மேற்கு வங்காளம், நந்தி கிராமத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள் [தொகு]
- 1879 - அல்பர்ட் ஐன்ஸ்டீன், இயற்பியலாளர் (இ. 1955)
- 1965 - அமீர் கான், நடிகர்
இறப்புக்கள் [தொகு]
- 1883 - கார்ல் மார்க்ஸ், ஜெர்மனிய மெய்யியலாளர் (பி. 1818)
- 1932 - ஜோர்ஜ் ஈஸ்ற்மன் அமெரிக்க கண்டுபிடிப்பாளர் (பி. 1854)
- 1995 - வில்லியம் பவுலர், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1911)