மே 17
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | மே 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
| MMXIII | ||||||
மே 17 கிரிகோரியன் ஆண்டின் 137ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 138ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 228 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- 1498 - வாஸ்கொடகாமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார்.
- 1521 - பக்கிங்ஹாமின் மூன்றாவது நிலை சீமானான (Duke) எட்வேர்ட் ஸ்டாஃபேர்ட் தூக்கிலிடப்பட்டான்.
- 1590 - டென்மார்க்கின் ஆன் ஸ்கொட்லாந்து அரசியாக முடி சூடினாள்.
- 1792 - நியூ யோர்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது.
- 1809 - பிரெஞ்சுப் பேரரசுடன் இத்தாலியின் திருச்சபை நாடுகளை இணைக்க முதலாம் நெப்போலியன் ஆணையிட்டான்.
- 1814 - நோர்வே நாட்டின் அரசியல் நிர்ணயம் அமைக்கப்பட்டது.
- 1846 - அடொல்ஃப் சாக்ஸ் என்பவரால் சாக்சபோன் வடிவமைக்கப்பட்டது.
- 1865 - அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் ஏற்படுத்தப்பட்டது. இது பின்னர் அனைத்துலகத் தொலைத்தகவல் தொடர்பு மையம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
- 1915 - பிரித்தானியாவின் கடைசி லிபரல் கட்சி ஆட்சி வீழ்ந்தது.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரைக் கைப்பற்றியது.
- 1969 - சோவியத்தின் வெனேரா 6 விண்கலம் வீனஸ் கோளின் வளிமண்டலத்துள் சென்று வீனசில் மோத முன்னர் வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது.
- 1974 - அயர்லாந்தில் டப்ளினில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர்.
- 1983 - லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேறுவதற்கான உடன்பாடு லெபனான், இஸ்ரேல், ஐக்கிய அமெரிக்கா ஆகியவற்றுக்கிடையில் எட்டப்பட்டது.
- 1998 - தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண நகர முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
- 2006 - தமிழ்த் தொலைக்காட்சி நடிகை ஷ்ரத்தா விஸ்வநாதன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
- 2009 - தமிழினப் படுகொலை நாள். வன்னிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இலங்கை அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்டனர். நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தது.
பிறப்புகள்[தொகு]
- 1749 - எட்வர்ட் ஜென்னர் - ஆங்கில மருத்துவ ஆராய்ச்சியாளர் (இ. 1823)
- 1920 - பி. சாந்தகுமாரி, நடிகை, பாடகி
- 1974 - செந்தில் ராமமூர்த்தி, அமெரிக்க நடிகர்
இறப்புகள்[தொகு]
- 2006 - ஷ்ரத்தா விஸ்வநாதன், தமிழ்த் தொலைக்காட்சி நடிகை
- 2007 - நகுலன், தமிழ் எழுத்தாளர்
- 2010 - அனுராதா ரமணன், தமிழ்ச் சிறுகதை, புதின எழுத்தாளர்
சிறப்பு நாள்[தொகு]
- உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள்
- நோர்வே - அரசியல் நிர்ணய நாள்