மொனாக்கோ
| Principauté de Monaco
மொனாக்கோ நாடு
|
||||
|---|---|---|---|---|
|
|
||||
| குறிக்கோள் "Deo Juvante" (இலத்தீன்) "கடவுளின் உதவியுடன்" |
||||
| நாட்டுப்பண் ஹிம் மொனெகாஸ்க் |
||||
|
அமைவிடம்: மொனாக்கோ (circled in inset)
in ஐரோப்பாவில் (white) |
||||
| தலைநகரம் | மொனாக்கோ[1] | |||
| பெரிய அதிக மக்கள்தொகை கொண்ட நாடு | மொன்ட்டே கார்லோ |
|||
| ஆட்சி மொழி(கள்) | பிரெஞ்சு [2] | |||
| மக்கள் | மொனெகாஸ்க் | |||
| அரசு | அரசமைப்புக்குட்பட்ட முடியரசு | |||
| - | இளவரசர் | மொனாக்கோவின் இரண்டாம் ஆல்பர்ட் | ||
| - | பிரதமர் | மைக்கேல் ரொஜர் | ||
| - | நாட்டுச் சபையின் தலைவர் | ஸ்டெஃபான் வலேரி (மொனாக்கோ ஒன்றியம்) | ||
| விடுதலை | ||||
| - | கிரிமால்டி வம்சம் | 1297 | ||
| பரப்பளவு | ||||
| - | மொத்தம் | 1.95 கிமீ² (233வது) .76 சது. மை |
||
| - | நீர் (%) | 0.0 | ||
| மக்கள்தொகை | ||||
| - | 2007 மதிப்பீடு | 32,671 (205வது) | ||
| - | 2000 குடிமதிப்பு | 32,020 | ||
| - | அடர்த்தி | 16,754/கிமீ² (2வது) 47/சதுர மைல் |
||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2007 கணிப்பீடு | |||
| - | மொத்தம் | $976 மில்லியன் (179வது) | ||
| - | நபர்வரி | $70,670 (€50,000) (2/3) | ||
| ம.வ.சு (2003) | ||||
| நாணயம் | யூரோ (EUR) |
|||
| நேர வலயம் | நடு ஐரோப்பா (ஒ.ச.நே.+1) | |||
| - | கோடை (ப.சே.நே.) | நடு ஐரோப்பா (ஒ.ச.நே.+2) | ||
| இணைய குறி | .mc | |||
| தொலைபேசி | +377 | |||
மொனாக்கோ (Monaco) என்பது ஐரோப்பாவில் பிரெஞ்சு ரிவியேராவில் (கோட் டாசூர்) பிரான்ஸ் நாட்டுக்கு தென்கிழக்கில் உள்ள ஒரு தன்னாட்சி கொண்ட நகர-நாடு. வத்திக்கான் நகருக்கு அடுத்ததாக உலகின் மிகச்சிறிய நகர-நாடு இதுவாகும். இதன் எல்லையின் வடக்கு, மேற்கு, மற்றும் தெற்குப் பகுதிகளில் பிரான்சு நாடு உள்ளது. இதன் பரப்பளவு 1.98 சதுர கிமீ (0.76 சதுர மைல்), 2001 ஆம் ஆண்டில் இதன் மக்கள்தொகை 35,986 ஆகும். மொனாகோ உலகின் அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP $215,163) கொண்டுள்ளது. அத்துடன் உலகின் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ள நாடும், தனி நபர் வாழ்வுக் காலம் (90 ஆண்டுகள்) அதிகமான நாடும் இதுவே. அண்மையில் ஹேர்க்குலி துறைமுக விரிவாக்கத்தை அடுத்து மொனாக்கோவின் மொத்தப் பரப்பளவு 2.05 சதுர கிமீ ஆக அதிகரித்தது. நடுநிலக் கடலில் மேலும் நிலம் மீளக் கோரப்பட்டதை அடுத்து நாட்டின் பரப்பளவை மேலும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மொனாக்கோ அரசமைப்புக்குட்பட்ட முடியரசாக ஆளப்பட்டு வருகிறது. இதன் தலைவராக இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் உள்ளார். 1297 ஆம் ஆண்டில் இருந்து மொனாக்கோவை கிரிமால்டி குடும்பத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. 1861 ஆம் ஆண்டில் பிரான்சுடன் ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து இது சுயாட்சி கொண்ட நாடாக அங்கீகரிக்கப்பட்டது. கிரிமால்டி வம்சத்தினரே இதனை ஆண்டு வருகின்றனர். மொனாக்கோ தனி நாடாக இருந்தாலும், இதன் தேசியப் பாதுகாப்பு பிரான்சின் பொறுப்பில் உள்ளது. வெளிநாட்டுக் கொள்கையை மொனாக்கோவே கவனித்துக் கொள்கிறது.
சுற்றுலா இந்நாட்டின் முக்கிய தொழில் ஆகும். இங்கு பிரெஞ்சு மொழி பேசப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "History & Heritage". Council of Government. பார்த்த நாள் 2008-05-22.
- ↑ "CONSTITUTION DE LA PRINCIPAUTE". Council of Government. பார்த்த நாள் 2008-05-22.