மே 11
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | மே 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
| MMXIII | ||||||
மே 11 கிரிகோரியன் ஆண்டின் 131ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 132ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 234 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1502 - கொலம்பஸ் தனது கடைசியும் கடைசியுமான கடற் பயணத்தை மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஆரம்பித்தார்.
- 1812 - லண்டனில் நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் ஸ்பென்சர் பேர்சிவல் ஜோன் பெல்லிங்ஹம் என்பவனால் கொல்லப்பட்டார்.
- 1857 - இந்தியக் கிளர்ச்சி, 1857: இந்தியப் புரட்சியாளர்கள் டெல்லியை பிரித்தானியர்களிடம் இருந்து கைப்பற்றினர்.
- 1867 - லக்சம்பேர்க் விடுதலை அடைந்தது.
- 1891 - ஜப்பானில் பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்ய மன்னர் இரண்டாம் நிக்கலாஸ் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.
- 1905 - அல்பேர்ட் ஐன்ஸ்டீன் பிரௌனியன் இயக்கம் பற்றிய தனது விளக்கத்தை வெளியிட்டார்.
- 1924 - மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் காட்லீப் டைம்லர், கார்ல் பென்ஸ் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்டது.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் அலூசியன் தீவுகளின் அட்டு தீவைக் கைப்பற்றினர்.
- 1949 - சியாம் நாடு தாய்லாந்து எனப் பெயர் மாற்றம் பெற்றது.
- 1949 - ஐக்கிய நாடுகள் அவையில் இசுரேல் இணைந்தது
- 1953 - டெக்சாசில் இடம்பெற்ற சூறாவளியில் 114 பேர் உயிரிழந்தனர்.
- 1960 - முதலாவது கருத்தடை மாத்திரை அறிமுகமானது.
- 1985 - இங்கிலாந்தில் உதைப்பந்தாட்ட போட்டியொன்றில் அரங்கில் இடம்பெற்ற தீயினால் 56 பார்வையாளர்கள் கொல்லப்பட்டனர்.
- 1987 - முதலாவது இதய மாற்றுச் சத்திர சிகிச்சை மேரிலாந்தில் நடத்தப்பட்டது.
- 1997 - ஐபிஎம் இன் ஆழ் நீலக் கணினி முதன் முதலாக காரி காஸ்பரவை சதுரங்க ஆட்டத்தில் தோற்கடித்தது.
- 1998 - இந்தியா பொக்ரானில் மூன்று அணுச் சோதனைகளை நடத்தியது.
பிறப்புக்கள் [தொகு]
- 1895 - ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி இந்தியத் தத்துவஞானி (இ. 1986)
- 1897 - சுத்தானந்த பாரதியார், கவியோகி (இ. 1990)
- 1897 - ஜார்ஜ் பீட்டர் மர்டாக், மானிடவியலாளர் (இ. 1985)
இறப்புகள் [தொகு]
- 1976 - அல்வார் ஆல்ட்டோ, பின்லாந்து கட்டிடக்கலைஞர் (பி. 1898)