சுத்தானந்த பாரதியார்
சுத்தானந்த பாரதியார் (மே 11, 1897 - மார்ச் 7, 1990) கவியோகி, மகரிஷி என்று போற்றப்பட்டவர். கவிதைகள், தமிழிசைப் பாடல்கள், உரைநடை நூல்கள், மேடை நாடகங்கள் எனப் பல நூல்களை இயற்றியவர். சுத்தானந்தர் தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
பொருளடக்கம் |
ராஜராஜன் விருது [தொகு]
1984 தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் நிறுவிய முதல் ராஜராஜன் விருதைப் (மாமன்னன் இராசராசன் படைப்பிலக்கியப் பெரும் பரிசு) பெற்றார் கவியோகி சுத்தானந்த பாரதி. அவர் எழுதிய ஆயிரமாயிரம் நூல்களில், மாபெரும் காவியமான "பாரத சக்தி மகாகாவியம்" அவர், சுதந்திரம் கிடைக்கும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்தபோது மனதில் தோன்றிய காவியம் ஆகும். ஜடாதரய்யர் காமாட்சி தம்பதியின் நான்காவது குழந்தையாக பிறந்தார் சுத்தானந்தர். காலம்: 1891-1990 அவரின் பிள்ளை திருநாமம் வேங்கட சுப்பிரமணியன். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தான் சுத்தானந்தர், 'ஆயுட்காவியம்' என அப்பெரியாரே குறிப்பிட்டுக் கொள்ளும் 'பாரத சக்தி' மகா காவியத்தைப் பாடத் துவங்கினார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை ஆகிய கவிதை நூல்கள் பிரபலமானவை. தமிழின் வரலாற்றில் சிறப்பாக தொண்டாற்றிய இவர், தமது தொண்ணூற்று ஒன்பதாம் வயதில் காலமானார்.
திருக்குறள் மொழிபெயர்ப்பு [தொகு]
திருக்குறளை அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சுத்தானந்த பாரதியார், 1968 ஆம் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், அப்புத்தகம் தெய்வநெறி கழகத்தாரால் வெளியிடப்பட்டது.
இயற்றிய தமிழிசைப் பாடல்களின் பட்டியல் [தொகு]
- 'எப்படிப் பாடினரோ ...' - கர்நாடக தேவ காந்தாரி. [1]
இதர விருதுகள் [தொகு]
- சோவியத் கீதாஞ்சலி என்னும் நூல் சோவியத் ஒன்றியத்தின் சோவியத் நாடு நேரு நினைவுப் பரிசு பெற்றது.
எழுதிய நூல்கள் [தொகு]
நாவலர் பெருமான். ஸ்ரீ சுத்தானந்த பாரதியார். தமிழ்நாடு: புதுயுக நிலையம், புதுச்சேரி. 1வது பதிப்பு: மே 1948. (புதுச்சேரி: ஸ்ரீ அரவிந்தாஸ்ரம அச்சுக்கூடம்). 234 பக்கம், விலை: ரூபா 3.00
கவியோகி சுத்தானந்த பாரதியார் சிவகங்கையில் 11.05.1897இல் பிறந்தவர். 07.03.1990 இல் மறைந்தவர். காப்பியங்கள்ää கட்டுரைகள்ää நாவல்கள் கவிதைகள்ää தமிழிசைப் பாடல்கள்ää மேடை நாடகங்கள் என இவரது இலக்கியப்பரப்பு விரிந்தது. இவர் ஆறுமுக நாவலர் பற்றி எழுதிய நூல் இதுவாகும்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 'அடுத்த ஸ்லாட்டுக்கு தயார்!' எனும் தலைப்பில் 'தினமணி' நாளிதழில் ( டிசம்பர் 29, 2012 - சென்னைப் பதிப்பு) எழுதப்பட்ட கட்டுரை