ஏப்ரல் 5
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | ஏப்ரல் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||
| MMXIII | ||||||
ஏப்ரல் 5 கிரிகோரியன் ஆண்டின் 95ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 96ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 270 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- 456 - சென் பாட்ரிக் அயர்லாந்துக்கு மத தூதராக வந்தார்.
- 1614 - வேர்ஜீனியாவில் அமெரிக்கப் பழங்குடியினளான போக்கஹொண்டாஸ் ஆங்கிலேய குடியேற்றவாதியான ஜோன் ரோல்ஃப் என்பவனைத் திருமணம் புரிந்தாள்.
- 1654 - ஆங்கில-டச்சுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு எட்டப்பட்டது.
- 1792 - அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் வாஷிங்டன் முதற் தடவையாக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.
- 1804 - முதற்தடவையாக விண்கல் ஒன்று வீழ்ந்தது ஸ்கொட்லாந்தில் பதிவானது.
- 1879 - பொலிவியா, மற்றும் பெரு மீது சிலி போரை அறிவித்தது. பசிபிக் போர் ஆரம்பமானது.
- 1897 - கிரேக்கத்துக்கும் ஓட்டோமான் பேரரசுக்கும் இடையில் போர் ஆரம்பமானது.
- 1930 - மகாத்மா காந்தி அரபிக் கடலின் குஜராத் கடற்கரையோரப் பகுதியான தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பபயணத்தை முடித்தார்.
- 1936 - மிசிசிப்பியில் சுழற்காற்று தாக்கியதில் 233 பேர் கொல்லப்பட்டனர்.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் போர்க்கப்பல்கள் இலங்கையைத் தாக்கின. இரண்டு பிரித்தானியக் கப்பல்கள் தாண்டன.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: கிளெய்சோரா என்ற கிரேக்க நகரில் 270 உள்ளூர் மக்கள் ஜெர்மனியினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1945 - பனிப்போர்: யோகொஸ்லாவியாவினுள் சோவியத் படைகள் தற்காலிகமாக நுழைவதற்கு அந்நாட்டு அதிபர் ஜோசப் டீட்டோ சோவியத் ஒன்றியத்துடன் உடன்பாடு செய்து கொண்டார்.
- 1946 - 11 மாதங்கள் ஆக்கிரம்பீன் பின்னர் சோவியத் படைகள் டென்மார்க் தீவான போர்ன்ஹோல்மை விட்டு விலகினர்.
- 1949 - இலினோய் மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் தீப்பிடித்ததில் 77 பேர் கொல்லப்பட்டனர்.
- 1955 - ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியிலிருந்து வின்ஸ்டன் சேர்ச்சில் விலகினார்.
- 1956 - பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அதிபருடன் போரை அறிவித்தார்.
- 1956 - இலங்கைப் பொதுத்தேர்தலில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான கட்சி வெற்றி பெற்றது.
- 1957 - இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பொதுவுடமைவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றினர். ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சரானார்.
- 1964 - பூட்டான் பிரதமர் ஜிக்மி டோர்ஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1971 - இலங்கை அரசிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் நாட்டின் தென் பகுதிகளில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
- 1976 - மக்கள் சீனக் குடியரசில் தியனன்மென் சதுக்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்ட நிகழ்வு இடம்பெற்றது.
- 1981 - தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
- 1998 - அக்காஷி-கைக்கியோ பாலம், உலகின் மிகப் பெரிய தொங்கு பாலம், ஜப்பானில் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்டது.
பிறப்புகள்[தொகு]
- 1908 - ஜகஜீவன் ராம், இந்தியத் துணைப்பிரதமர், (இ.1986)
- 1929 - Ivar Giaever, நோபல் பரிசு பெற்ற நோர்வே இயற்பியலாளர்
- 1933 - க.கைலாசபதி, தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் (இ. 1982)
இறப்புகள்[தொகு]
- 1957 - ராம. அழகப்பச் செட்டியார், இந்திய தொழிலதிபர் (பி. 1909)
- 1967 - ஹேர்மன் முல்லர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1890)
- 1962 - ஆனந்த சமரக்கோன், சிங்கள இசைக் கலைஞர், பாடலாசிரியர் (பி. 1911)
- 1992 - சாம் வோல்ற்றன், அமெரிக்க விற்பனை நிறுவனம் வோல் மார்ட் நிறுவனர் (பி. 1918
- 2005 - சோல் பெலோ, நோபல் பரிசு பெற்ற கனடிய எழுத்தாளர் ([பி. 1915)