ஆகஸ்டு 11
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆகத்து 11 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | ஆகஸ்ட் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
| MMXIII | ||||||
ஆகஸ்டு 11 கிரிகோரியன் ஆண்டின் 223வது நாளாகும். நெட்டாண்டுகளில் 224வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 142 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- கிமு 2492 - ஆர்மீனியா அமைக்கப்பட்டது.
- கிமு 480 - பாரசிகர்கள் கிரேக்கர்களை கடற்சமரில் வென்றனர்.
- கிமு 586 - ஜெருசலேமில் சொலமன் மன்னனால் கட்டப்பட்ட முதலாவது ஆலயம் பாபிலோனியர்களினால் அழிக்கப்பட்டது.
- 355 - நாட்டுத்துரோகக் குற்றம் சாட்டப்பட்ட குளோடியஸ் சில்வானஸ் ரோமப் பேரரசனாகத் தன்னை அறிவித்தான்.
- 1786 - மலேசியாவில் பெனாங்க்கில் கப்டன் பிரான்சிஸ் லையிற் என்பவனால் பிரித்தானியக் குடியேற்றம் அமைக்கப்பட்டது.
- 1804 - இரண்டாம் பிரான்சிஸ் ஆஸ்திரியாவின் முத்லாவது மன்னன் ஆனான்.
- 1812 - இலங்கையில் தாவரவியல் பூங்கா அமைக்கபட்டது.
- 1898 - அமெரிக்கப் படைகள் புவெர்ட்டோ ரிக்கோவின் மயாகெஸ் நகரினுள் நுழைந்தன.
- 1920 - லாத்வியாவின் அதிகாரத்தை போல்ஷெவிக் ரஷ்யாவிடம் வழங்கும் உடன்பாடு லாத்வியாவுக்கும் ரஷ்யாவுக்குமிடையில் ஏற்பட்டது.
- 1954 - கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை மாவட்டங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தில் பங்கு பற்றிய 16 தமிழர்கள் காவற்துறையினரால் சுடப்பட்டு மாண்டனர்.
- 1960 - பிரான்சிடம் இருந்து சாட் விடுதலையை அறிவித்தது.
- 1965 - கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் வாட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 34 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
- 1968 - பிரித்தானியாவின் நீராவித் தொடருந்து தனது கடைசி பயணிகள் சேவையை நடத்தியது.
- 1972 - வியட்நாம் போர்: கடைசி அமெரிக்க தாக்குதல் படையினர் தென் வியட்நாமை விட்டுப் புறப்பட்டனர்.
- 1975 - போர்த்துக்கீசத் தீமோரில் உள்நாட்டுக் கலவரம் ஆரம்பித்ததில் அதன் ஆளுநர் "மாரியோ லெமொஸ் பிரெஸ்" தலைநகர் டிலியை விட்டுத் தப்பினார்.
- 1984 - வானொலி ஒன்றிற்காக தனது குரலை சோதிப்பதற்காக அமெரிக்க அதிபர் ரொனால்ட் றேகன் கூறியது: "எனது சக அமெரிக்கர்களே, ரஷ்யாவை அழிப்பதற்கான சட்டவாக்கத்திற்கு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறேன். இன்னும் ஐந்து நிமிட நேரத்தில் குண்டுவீச்சு ஆரம்பமாகும்".
- 1999 - ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது.
- 2003 - ஆப்கானிஸ்தானுக்கு அமைதி காக்கும் படையை நேட்டோ நாடுகள் அனுப்பின.
- 2003 - ஜெமா இஸ்லாமியா இயக்கத் தலைவர் ரிதுவான் இசாமுதீன் (ஹம்பாலி) பாங்கொக் நகரில் கைது செய்யப்பட்டார்.
- 2006 - யாழ் குடாநாட்டையும் இலங்கையின் தென்பகுதியையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலை காலவரையறையின்றி மூடப்பட்டு யாழ்ப்பாண மக்கள் குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டனர்.
பிறப்புக்கள் [தொகு]
- 1837 - மரீ பிரான்சுவா சாடி கார்னோ, பிரெஞ்சு அரசியல்வாதி (இ. 1894)
- 1897 - எனிட் பிளைட்டன், எழுத்தாளர் (இ. 1968)
- 1937 - ஜான் ஆபிரகாம், திரைப்பட இயக்குநர் (இ. 1987)
- 1943 - பெர்வேஸ் முஷாரஃப், பாகிஸ்தான் அதிபர்
- 1959 - தர்மரத்தினம் சிவராம், இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் (இ. 2005)
இறப்புகள் [தொகு]
- 1747 - விஜய ராஜசிங்கன் - கண்டி நாயக்க மன்னன்
- 1890 - ஜோன் ஹென்றி நியூமன், ஆங்கிலக் கர்தினால், ஆக்ஸ்போர்ட் இயக்கத் தலைவர்களில் ஒருவர் (பி. 1801)
- 1956 - ஜக்சன் பொல்லொக், அமெரிக்க ஓவியர் (பி. 1912)