சூலை 15
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | சூலை 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | 31 | |||
| MMXIII | ||||||
சூலை 15 கிரிகோரியன் ஆண்டின் 196வது நாளாகும். (நெட்டாண்டுகளில் 197வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 169 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1240 - அலெக்சாண்டர் நெவ்ஸ்கி தலைமையிலான ரஷ்யப் படைகள் சுவீடன் படைகளை "நேவா" என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர்.
- 1381 - இங்கிலாந்தில் உழவர்களின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த "ஜோன் போல்" என்ற மதகுரு இரண்டாம் ரிச்சார்ட் மன்னனின் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார்.
- 1741 - அலெக்சி சிரிக்கொவ் தென்மேற்கு அலாஸ்காவைக் கண்ணுற்று தனது ஆட்கள் சிலரை படகில் அங்கு அனுப்பினார். இவர்களே முதன் முதலில் அலாஸ்காவில் தரையிரங்கிய முதலாவது ஐரோப்பியர் ஆவர்.
- 1815 - நெப்போலியன் பொனபார்ட் பெலெரொபோன் என்ற கப்பலில் இருந்து அதன் கப்டனிடம் சரணடைந்தான்.
- 1840 - ஆஸ்திரியா, பிரித்தானியா, புருசியா, மற்றும் ரஷ்யா ஆகியன ஓட்டோமான் பேரரசுடன் லண்டனில் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.
- 1857 - சிப்பாய்க் கலகம்: கான்பூரில் இரண்டாவது படுகொலைகள் இடம்பெற்றன.
- 1860 - இலங்கையின் பிரதம நீதியரசராக சேர் எட்வேர்ட் ஷெப்பர்ட் கிறீசி நியமிக்கப்பட்டார்.
- 1870 - புரூசியாவும் இரண்டாம் பிரெஞ்சுப் பேரரசும் தமக்கிடையே போரை ஆரம்பித்தன.
- 1870 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோர்ஜியா அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது. அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.
- 1888 - ஜப்பானின் பண்டாய் மலை வெடித்ததில் 500 பேர் கொல்லப்பட்டனர்.
- 1916 - வாஷிங்டன், சியாட்டில் நகரில் வில்லியம் போயிங், ஜோர்ஜ் வெஸ்டர்வெல்ட் போயிங் விமான நிறுவனத்தை ஆரம்பித்தனர்.
- 1927 - வியென்னாவில் 89 ஆர்ப்பாட்டக்காரர் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1954 - இரண்டு வருட உருவாக்கத்தின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் போயிங் 707 விமானம் பறக்கவிடப்பட்டது.
- 1955 - அணுவாயுதங்களுக்கு எதிராக 18 நோபல் விருதாளர்கள் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
- 1974 - சைப்பிரஸ், நிக்கோசியாவில் கிரேக்க ஆதரவு தேசியவாதிகள் அதிபர் மக்காரியோசைப் பதவியில் இருந்து அகற்றி நிக்கோஸ் சாம்ப்சனை அதிபராக்கினர்.
- 1983 - பாரிசில் ஓரி விமானநிலையத்தில் ஆர்மீனியத் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 55 பேர் காயமடைந்தனர்.
- 1991 - ஈழத்து எழுத்தாளர் நெல்லை க. பேரன் இலங்கை இராணுவத்தின் எறிகணை வீச்சில் குடும்பத்தோடு கொல்லப்பட்டார்.
- 2002 -- வோல் ஸ்ட்றீட் ஜேர்னல் ஊடகவியலாளர் டானியல் பேர்ளப் படுகொலை செய்த குற்றத்துக்காக பிரித்தானியாவில் பிறந்த "அகமது ஷேக்" என்பவனுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
- 2003 - மொசில்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
பிறப்புகள் [தொகு]
- 1606 - ரெம்பிரான்ட், டச்சு ஓவியர் (இ. 1669)
- 1876 - மறைமலை அடிகள், தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்தவர் (இ. 1950)
- 1903 - கே. காமராஜ், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் (இ. 1975)
- 1926 - கே. ஷங்கர், தமிழ்த் திரைப்பட இயக்குனர் (இ. 2006)
இறப்புகள் [தொகு]
- 1904 - அன்ரன் செக்கோவ், ரசிய எழுத்தாளர் (பி. 1860)
- 1991 - நெல்லை க. பேரன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1946)
- 2002 - எம். எச். எம். ஷம்ஸ், இலங்கையின் ஊடகவியலாளர் (பி. 1940)
- 2003 - என். கே. பத்மநாதன், ஈழத்தின் பிரபல நாதசுவரக் கலைஞர் (பி. 1931)