மரணதண்டனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மரண தண்டனை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
17 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் ஒரு குற்றவாளி யானையால் மிதித்துக் கொல்லப்படும் காட்சி. ராபர்ட் நொக்ஸ் 1681 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட நூலொன்றில் உள்ள படம்.

மரணதண்டனை என்பது, ஒரு அதிகார நிறுவனம் தனது நடவடிக்கைகளூடாகக் மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும். மனிதர் இழைக்கும் குற்றம் அல்லது தவறு அவரின் உடல் சார்ந்த செயல்பாடாகப் புரிந்துகொள்ளப்பட்ட தொன்மைக்கால தண்டனை முறைகளில் இதுவும் ஒன்றாகும். திருட்டைச் செய்த மனிதரின் கை துண்டிக்கப்படுதல், வேதத்தைக் கேட்டதற்காக காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுதல் போன்ற தண்டனை முறைகளுக்கும் மரண தண்டனைக்கும் இடையிலான கோட்பாட்டு அடிப்படை ஒன்றேயாகும். மிகப் பழைய காலம் முதலே கடுமையான குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு வந்துள்ளது. அதில் குறிப்பானது கொலையாகும். எல்லா நாடுகளிலும் கொலைக்கு மரணதண்டனை விதிக்கப்படுதல் ஏதேனும் ஒரு காலப்பகுதியில் நிலவிவந்துள்ளது. எனினும் கடுமையான குற்றம் எது என்பது அவ்வச் சமூகங்களின் பண்பாடு, அரசு அல்லது அரசனின் கொள்கைகள், அரசியல் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபட்டு அமையும். இத் தண்டனை நிறைவேற்றப்படும் முறையும் நாட்டுக்கு நாடும், காலத்துக்குக் காலமும் வேறுபாடாக இருந்து வந்துள்ளன. தலையை வாளினால் அல்லது வேறு முறைகள் மூலம் துண்டித்தல், கழுவில் ஏற்றுதல், கல்லால் எறிந்து கொல்லுதல், கல்லில் கட்டிக் கடலில் எறிதல், மின்கம்பத்தில் கட்டிவைத்துச் சுடுதல், கழுத்துவரை நிலத்தில் புதைத்து யானையால் மிதிக்கச் செய்தல், காட்டு விலங்குகளுக்கு இரையாக்குதல், தூக்கில் இடுதல், உயிருடன் புதைத்தல், நஞ்சூட்டுதல், துப்பாக்கியால் சுடுதல், மின்னதிர்ச்சி கொடுத்தல் போன்று பல முறைகள் கையாளப்பட்டு வந்துள்ளன.

கொலை, தேசத்துரோகம், அரசுக்கு அல்லது அரசனுக்கு எதிரான சதி செய்தல் போன்ற குற்றங்கள் பரவலாக மரணதண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்பட்டவை. இவை தவிர அரசு சார்பான மதங்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் குற்றங்கள் போன்றனவும் சில சமூகங்களில் மரண தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன. தற்காலத்தில் சில நாடுகளில் போதை மருந்துகளைக் கடத்துதல் போன்றவையும் மரணதண்டனைக்கு உரிய குற்றங்களாக ஆக்கப்பட்டுள்ளன.

மரணதண்டனை நவீன நீதிமுறைகளின் அடிப்படைக்கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் அதனை ஒழிக்கவேண்டும் என்றும் பல்வேறு கருத்துகள் வலுப்பெறத் தொடங்கிய பின்னர் பல நாடுகள் மரணதண்டனையை முற்றாக ஒழித்து விட்டன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இப்போது மரணதண்டனை விதிக்கப்படுவது இல்லை. வேறு பல நாடுகளிலும் இது பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

வரலாறு[தொகு]

மரணதண்டனை முறைகள்[தொகு]

நடைமுறையில் உள்ள முறைகள்[தொகு]

பழங்கால தண்டனை முறைகள்[தொகு]

நடைமுறையில் மரணதண்டனை[தொகு]

மரணதண்டனையை நிறைவேற்றும் உலக நாடுகள் (2011 பிப்ரவரி நிலவரம்).
     எந்த குற்றத்திற்கும் மரணதண்டனையில்லை (96)      அரிதான குற்றங்களைத் தவிற மற்ற அனைத்து குற்றங்களுக்கும் மரணதண்டையில்லை (9)      கடந்த 10 ஆண்டுகளாக மரணதண்டனையை தவிர்க்கும் நாடுகள்(34)      மரண தண்டனையை நிறைவேற்றும் நாடுகள் (58)* * While laws vary among U.S. states, it is considered retentionist because the federal death penalty is still in active use.

உலகில் பல்வேறு நாடுகள் மரணதண்டனையை சட்டத்தின் மூலமாக அங்கிகாரம் செய்துள்ளன. சில நாடுகளில் தற்போது மரணதண்டனைக்கு மாற்று தண்டனைகள் குறித்தான ஆய்வில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு மரணதண்டனைகளை நிறைவேற்றும் நாடுகள் வேறுவேறு முறைகளில் மரணதண்டனையை கையாளுகின்றன.

ஐ.நா உறுப்பு நாடுகளும், ஐ.நா பார்வையாளர் அந்தஸ்து உடைய நாடுகளுமான 195 நாடுகள் கீழ்வரும் கொள்கையை பின்பற்றுகின்றன,.

உலகின் 90% நாடுகள் சர்வதேச மன்னிப்பு சபை படி, இயங்குகின்றன. 100ல் (51%) நாடுகள் மரணதண்டையை ஒழிக்க வேண்டுமென விரும்புகின்றன,. 7ல் (4%) நாடுகள் விதிவிலக்கான சூழ்நிலைகளில் (அதாவது போர் நேரம் போன்ற) குற்றங்களை தடுக்க மரணதண்டனையை விரும்புகின்றன. 48ல் (25%) நாடுகள் சாதாரண குற்றங்களுக்காக மரணதண்டனை பயன்பாட்டை அனுமதிக்கின்றன. 40ல் (20%) நாடுகளின் சட்ட நடைமுறையில் இரண்டு மரண தண்டனைகளைப் பராமரிக்கின்றன.


Rank Country Number executed in 2011[1]
1 சீன மக்கள் குடியரசின் கொடி People's Republic of China &0000000000004000.000000Officially not released.[2][3] In the thousands, may be up to 4,000.[4]
2 ஈரான் கொடி ஈரான் &&&&&&&&&&&&0360.&&&&&0360+
3 சவூதி அரேபியாவின் கொடி சவுதி அரேபியா &&&&&&&&&&&&&082.&&&&&082+
4 ஈராக்கின் கொடி ஈராக் &&&&&&&&&&&&&068.&&&&&068+
5 ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு &&&&&&&&&&&&&043.&&&&&043
6 யேமனின் கொடி ஏமன் &&&&&&&&&&&&&041.&&&&&041+
7 வட கொரியாவின் கொடி வடக்கு கொரியா &&&&&&&&&&&&&030.&&&&&030+
8 சோமாலியாவின் கொடி சோமாலியா &&&&&&&&&&&&&010.&&&&&010
9 சூடானின் கொடி சூடான் &&&&&&&&&&&&&&07.&&&&&07+
10 வங்காளதேசத்தின் கொடி பங்களாதேசம் &&&&&&&&&&&&&&05.&&&&&05+
11 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி வியட்நாம் &&&&&&&&&&&&&&05.&&&&&05+
12 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி தெற்கு சூடான் &&&&&&&&&&&&&&05.&&&&&05
13 சீனக் குடியரசு கொடி சீனா &&&&&&&&&&&&&&05.&&&&&05
14 சிங்கப்பூர் கொடி சிங்கப்பூர் &&&&&&&&&&&&&&04.&&&&&04[5]
15 வார்ப்புரு:நாட்டுத் தகவல் Palestinian Authority Palestinian Authority &&&&&&&&&&&&&&03.&&&&&03
16 ஆப்கானிஸ்தானின் கொடி ஆப்கானிசுதான் &&&&&&&&&&&&&&02.&&&&&02
17 பெலருசின் கொடி Belarus &&&&&&&&&&&&&&02.&&&&&02
18 எகிப்தின் கொடி எகிப்து &&&&&&&&&&&&&&01.&&&&&01+
19 ஐக்கிய அரபு அமீரகத்தின் கொடி United Arab Emirates &&&&&&&&&&&&&&01.&&&&&01
20 மலேசியா கொடி மலேசியா &-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.000000+
21 சிரியாவின் கொடி Syria &-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.000000+


போதை மருந்து தொடர்பான குற்றங்களுக்கு தண்டனை[தொகு]

கொலை போன்ற கொடூரமான குற்றங்களுக்கும், பாலியன் வன்புணர்வு போன்றவையும் தவிர்த்து போதை மருந்து தொடர்பான குற்றங்களுக்கும் பல உலக நாடுகள் மரண தண்டனையை தருகின்றன. 2012 வரை போதை மருந்து தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனையை சட்டப்படி நிறைவேற்றிய நாடுகளின் பட்டியல்:

 Afghanistan
 Bangladesh
 Brunei
 People's Republic of China
 Egypt
 Indonesia
 Iran
 Iraq
 Kuwait
 Laos
 Malaysia
 Oman
 Pakistan
 Saudi Arabia
 Singapore
 Somalia
 Sri Lanka
 Thailand
 Vietnam
 United Arab Emirates
 United States
 Yemen
 Zimbabwe

மதங்களின் பார்வையில்[தொகு]

உலகின் முக்கியமான சமயங்கள் அனைத்தும் மரணதண்டனையைப் பற்றிய பல்வேறு கலவையான கருத்துகளை கொண்டுள்ளதாக உள்ளன. சமய கோட்பாடுகள், காலம் ஆகியவை மரண தண்டனை நிர்ணயம் செய்வதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

இந்து மதம்[தொகு]

முதன்மைக் கட்டுரை: இந்து மதத்தில் மரணதண்டனை

மரணதண்டனையை அனுமதிப்பது, தடை செய்வது என இரு போதனைகளை இந்து மதம் கொண்டுள்ளது.

இந்து சமயத்தின் புராணங்களிலும், சமயக் கதைகளிலும் மனித குலத்திற்கு தீமையை விளைவிக்கும் அரக்கர்கள் தெய்வங்களால் கொல்லப்படுதல் சொல்லப்படுகிறது. குற்றத்திற்கான தண்டனையை இறைவனே கொடுப்பார் என்பதை திருமாலின் தசவாதரங்களின் நோக்கம் விளக்குகிறது. இந்து மத தத்துவத்தின் படி ஆன்மா அழிவற்றது. உயிரானது இறந்த பிறகு, அவை உடலினை விட்டு பிரிந்து தனது நற்செயல்கள், தீசெயல்களைப் பொறுத்து சொர்கத்திற்கும், நரகத்திற்கும் செல்வதாக கருதப்பெறுகிறது. மகாபுராணங்களில் ஒன்றான கருட புராணம் மனிதர்கள் செய்யும் குற்றங்களுக்காக அவர்களின் ஆன்மா நரகத்தில் அடையும் துன்பங்களைப் பட்டியலிடுகிறது.

இசுலாம்[தொகு]

இசுலாமிய சட்டத்தின் சில வடிவங்கள், மரண தண்டனையை வரவேற்கின்றன. ஆயினும் குரானில் கூறப்பட்டுள்ள உண்மையான மரண தண்டனையை இசுலாமிய சட்டத்தினை அடிப்படையில் சில நாடுகள் பின்பற்றுகின்றன. மரண தண்டனைக்கு பதிலாக மற்றொரு முறை பயன்படுத்த குரான் வழிகாட்டுகிறது. கொலை குற்றம் சிவில் குற்றமாக கருதப்பட வேண்டும். குற்றவாளியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு பெற்றுதர வேண்டும். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் கொலை செய்வது என்பதிலிருந்து விலகிக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தரும் அதிகாரமும் வழங்கப்பெறும். இதனை வலியுருத்தும் குரானின் வரிகள் கீழே,..

பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து)விலகிக்கொள்வீர்கள்.
அல்குரான். 2: 178,179.

மரணதண்டனை எதிர்ப்பு[தொகு]

உலக நாடுகள் பலவற்றிலும் நடைமுறையில் உள்ள தூக்கிலிடுதல் போன்ற மரணதண்டனைகளை நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படியில் மனிதஉரிமையாளர்களால் மரணதண்டனை எதிர்ப்பானது செய்யப்பெறுகிறது. தவறுகளுக்காக தரப்படும் மரணதண்டனைகள் சரியானது அல்ல என்றும், தீர்வாகாது என்றும் இத்தகைய எதிர்ப்பாளர்கள் நம்புகிறார்கள். தேச பாதுகாப்பு, கொலை போன்ற கொடுரமான குற்றங்களுக்கு மரணதண்டனையைத் தவிற மற்ற தண்டனைகளை அளிக்க இவர்கள் வற்புருத்துகிறார்கள். மனித உயிர்கள் மகத்தானவை என்றும், கொலைக்கு மற்றொரு கொலை(மரணதண்டனை) கூடாதென்றும் கூறும் இவர்களில் இறைவன் கொடுத்த உயிரை பரிக்க மனிதர்களுக்கு உரிமையில்லை என்ற கருத்தினை உடைய ஆன்மிகவாதிகளும் உள்ளனர்.

மரணதண்டனை எதிர்க்க இயக்கங்கள் தொடங்கி, மாநாடுகளும், பிரட்சாரங்களும் நடைபெறுகின்றன.

காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.amnesty.org/en/library/asset/ACT50/001/2012/en/241a8301-05b4-41c0-bfd9-2fe72899cda4/act500012012en.pdf
  2. Hogg, Chris (29 December 2009). "China executions shrouded in secrecy". BBC News. http://news.bbc.co.uk/2/hi/8432514.stm. பார்த்த நாள்: 2010-04-14. 
  3. "The most important facts of 2008 (and the first six months of 2009)". Handsoffcain.info. பார்த்த நாள் 2010-08-23.
  4. "Dui Hua Estimates 4,000 Executions in China, Welcomes Open Dialogue". Dui Hua Foundation. பார்த்த நாள் June 2012.
  5. "Document - Singapore should join global trend and establish a moratorium on executions". Amnesty International. பார்த்த நாள் 2012-12-12.

வெளி இணைப்புகள்[தொகு]

Wikiquote-logo.svg
விக்கிமேற்கோள்களில் பின் வரும் நபர் அல்லது தலைப்பு தொடர்பான மேற்கோள்கள் தொகுக்கப்பட்டுள்ளன:

"http://ta.wikipedia.org/w/index.php?title=மரணதண்டனை&oldid=1667826" இருந்து மீள்விக்கப்பட்டது