பேச்சு:மரணதண்டனை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதற்கு இந்தத் தலைப்புப் பொறுத்தமாகாது death penalty அ death punishment என்று வந்தால் மட்டுமே இந்தத் தலைப்பு பொருந்தும். இதை தனித் தலைப்பாக வைக்கவும் ஆங்கில கட்டுரையுடன் இணைக்க முடியாது உச்சபட்ச தண்டணை அ கடுந்தண்டணை என்றே வைக்கவேண்டும் அகராதியில் பார்க்க. capital punishement நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும், சில நாடுகளில் மரணம் என்பதை தண்டணையாக கொடுப்பதை விலக்கிக்கொண்டது.--செல்வம் தமிழ் 12:03, 3 மார்ச் 2009 (UTC) ஆங்கில கட்டுரைகளிலும் தவறுதாலாகப் பெயரிட்டு விடுகிறார்கள். இதையே நாமும் பின்பற்றவேண்டிய அவசியம் இல்லை.--செல்வம் தமிழ் 12:09, 3 மார்ச் 2009 (UTC) இத் தொடர்புள்ள ஆங்கில கட்டுரையை மீள் வழிப்படுத்தியிருக்கின்றனர். வேறு தலைப்பிட்டுள்ளனர். அதேபோல் நீங்களும் மீள் வழிப்படுத்துங்கள் அ ஆங்கிலத்திலிருந்து பிரித்துவிடுங்கள். இந்த தலைப்பு தனியாக இருக்கட்டும் இல்லையேல் இது பொருள் தாராது.--செல்வம் தமிழ் 12:24, 3 மார்ச் 2009 (UTC)

இந்த தலைப்பு சற்றுச் சிக்கலனது என்ற உங்கள் அவதானிப்பு சரியானதே. capital punishment என்றால் பொதுவாக death penality தான் சுட்டுகிறார்கள். வேறு நாடுகளில் வேறுபட்டால், அவற்றுக்கான எ.காட்டுக்களை சுட்ட முடியுமா? மேலும் death penality பற்றித்தான் ஆங்கிலக் கட்டுரை அமைகிறது. மயூரநாதன், இது பற்றி மேலும் கருத்து கூறினால் நன்று. --Natkeeran 13:43, 3 மார்ச் 2009 (UTC)

இது ஆங்கிலக் கட்டுரையின் ஒரு பகுதியைத் தமிழாக்கி உருவாக்கப்பட்டது. இதனால் இதனை ஆங்கிலக் கட்டுரை இணைப்பிலிருந்து துண்டிக்க வேண்டியது இல்லை. மரண தண்டனை தவிர்ந்த வேறு தண்டனைகளைக் capital punishement என்று சொல்வதாக நான் இதுவரை கேள்விப்படவில்லை.

Dictionary.com பின்வரும் பொருள் தருகிறது.

  • capital punishment - punishment by death for a crime; death penalty.

AskOxford.com தரும் பொருள் இது.

  • capital punishment - the legally authorized killing of someone as punishment for a crime

எனவே capital punishment என்பது மரணதண்டனையையே குறிக்கிறது. மயூரநாதன் 16:49, 3 மார்ச் 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மரணதண்டனை&oldid=347019" இலிருந்து மீள்விக்கப்பட்டது