விண்வெளிப் போட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
A replica of Sputnik 1, உலகின் முதலாவது செய்மதி 1957 இல் ஏவப்பட்டது.
நீல் ஆம்ஸ்ட்ராங்,1969 இல் முதலாவதாக நிலவிற்கு சென்ற இருவரில் ஒருவர்; நிலவில் முதலாவதாக காலடி வைத்தவர்.

விண்வெளிப் போட்டி என்பது 20ஆம் நூற்றாண்டுகளின் மத்தியில் இருந்து அதற்கு பிறகான காலங்களில் சோவியத் ஒன்றியத்திற்கும், ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையே விண்வெளி ஆய்வுப் பயணத்தில் தங்களது மேலாதிக்கத்தை நிலைநாட்ட நடைபெற்ற போட்டியாகும். 1957 மற்றும் 1975களின் இடையே பனிப்போரின் எதிர் நாடுகளான இவ்விரு நாடுகளும் முதலில் விண்வெளி ஆய்வுப் பயணத்தை ஆரம்பிப்பதை குறிக்கோளாய்க் கொண்டிருந்தன. இது தேசிய பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப மற்றும் கருத்தியல் மேன்மையை நிலைநாட்ட இருநாடுகளுக்கும் மிகவும் தேவையானதாக இருந்தது. இந்த விண்வெளிப் போட்டியில் செயற்கைக்கோள் அனுப்புதல்,பூமியைச் சுற்றி சுற்றுப்பாதை மற்றும் துணை சுற்றுப்பாதை மனித விண்வெளிப்பறப்பு மற்றும் நிலவிற்கு பயணம் செய்தல் போன்றவைகளுக்கு இருநாடுகளும் மிகுந்த முக்கியத்துவம் அளித்தன. இப்போட்டி சோவியத் ஒன்றியத்தின் ஸ்புட்னிக் 1 செயற்கைக்கோள் ஏவுதலுடன் 4 அக்டோபர் 1957ல் ஆரம்பித்து, சூலை 1975 ல் இருநாடுகளின் கூட்டுத் திட்டமான அப்பல்லோ-சோயூஸ் சோதனை திட்டத்துடன் முடிவுக்கு வந்தது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=விண்வெளிப்_போட்டி&oldid=1368427" இருந்து மீள்விக்கப்பட்டது