சிலுவைப் போர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இது தொடர் கட்டுரைகளில் ஒன்றாகும்

இயேசு கிறிஸ்து

 
இயேசு · கிறிஸ்து
பிறப்பு · இறப்பு · உயிர்ப்பு · உயிர்த்த ஞாயிறு · கிறித்தவத்தில் இயேசு
அடிப்படை
திருத்தூதர்கள் · திருச்சபை · நம்பிக்கை அறிக்கைகள் · நற்செய்திகள் · இறையரசு ·
புதிய உடன்படிக்கை
விவிலியம்
பழைய ஏற்பாடு · புதிய ஏற்பாடு
புத்தகங்கள் · திருமுறை · இணைத் திருமுறை · தமிழ் விவிலியம்
இறையியல்
வாதம் · திருமுழுக்கு · கிறிஸ்தியல் · தந்தை · மகன் · தூய ஆவி ·
வரலாறு · மீட்பு · திரித்துவம்
வரலாறும் மரபும்
கால வரிசை · மரியாள் ·
பேதுரு · பவுல்  ·
திருச்சபைத் தந்தையர் ·
தொடக்கத் திருச்சபை ·
முதலாம் கான்ஸ்டன்டைன் ·
பொதுச்சங்கங்கள் · மறைபணி ·
பெரும் சமயப்பிளவு ·
சிலுவைப் போர்கள் ·
கிறித்தவச் சீர்திருத்த இயக்கம் · கத்தோலிக்க மறுமலர்ச்சி
உட்பிரிவுகளும் இயக்கங்களும்
கிறிஸ்தவம் தொடர்பானவை
கலை · விமர்சனம் · உட்பிரிவுகளுள் ஒற்றுமை · திருவழிபாட்டு ஆண்டு · வழிபாட்டு முறை · பாடல்கள் · பிற மத உறவு · இறைவேண்டல்கள் · பிரச்சாரம் · குறியீடுகள்
P christianity.svg கிறித்தவம் வலைவாசல்

முதலாவது சிலுவைப் போரின்போது இடம்பெற்ற அண்டியோக் முற்றுகை. மத்தியகாலச் சிற்றோவியம் ஒன்றிலிருந்து.

சிலுவைப் போர்கள் என்பன, வெளி எதிரிகளுக்கும், உள் எதிரிகளுக்கும் எதிராகப் பெரும்பகுதி கிறிஸ்தவ ஐரோப்பா நடத்திய பல தொடர்ச்சியான போர்கள் ஆகும். மதம் சார்ந்த இப்போர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களுக்கு எதிராகவே நடத்தப்பட்டது எனினும், சிலாவியர்கள், யூதர், ரஷ்ய மற்றும் கிரேக்க பழமைக் கோட்பாட்டுக் கிறிஸ்தவர்கள், மங்கோலியர், காத்தார்கள், ஹுசைட்டுகள், வால்டென்சியர்கள், பழம் பிரஸ்சியர்கள், பாப்பாண்டவரின் அரசியல் எதிரிகள் போன்றோருக்கு எதிராகவும் போர்கள் இடம்பெற்றன.

சிலுவைப் போர்கள் தொடக்கத்தில் ஜெரூசலத்தையும், புனித நிலத்தையும் முஸ்லிம்களிடமிருந்து மீளக் கைப்பற்றுவதை இலக்காகக் கொண்டிருந்ததுடன், அனத்தோலியாவுக்குள், முஸ்லிம் செல்யூக் துருக்கியர் நுழைவதைத் தடுப்பதற்கான கிழக்கத்திய பழமைக் கோட்பாட்டு பைசண்டியப் பேரரசின் வேண்டுகோளை ஏற்றுப் போர் தொடுக்கப்பட்டது. சிலுவைப் போர் என்னும் பெயர் இதற்குப் பின்னர் லேவன்ட்டுக்கு வெளியே பல்வேறு காரணங்களுக்காக நடத்தப்பட்ட போர்களையும் குறிக்கப் பயன்பட்டது.

சிலுவைப் போர்கள் நீண்டகால அரசியல், பொருளியல், சமூகத் தாக்கங்களைக் கொண்டிருந்தன. இவற்றுட் சில அண்மைக்காலம் வரை நீடித்தன. கிறிஸ்தவ இராச்சியங்கள், அரசியல் சக்திகள் மத்தியில் இருந்த உள் முரண்பாடுகளினால், சில சிலுவைப் போர்களின் தொடக்க இலக்கு த்சி திரும்பியது. நான்காவது சிலுவைப் போர் இதற்கு எடுத்துக்காட்டு ஆகும். இது, கிறிஸ்தவ கொன்ஸ்டண்டினோப்பிள் அழிவதற்கும், பைசண்டியப் பேரரசு பிரிக்கப்படுவதற்கும் காரணமாகியது. ஆறாவது சிலுவைப் போரே பாப்பாண்டவரின் அதிகாரபூர்வ ஆசியில்லாமல் நடைபெற்ற முதல் போராகும். ஏழாம், எட்டாம், ஒன்பதாம் சிலுவைப் போர்களில், மாம்லுக், ஹாப்சிட் வெற்றிகள் கிடைத்தன. ஒன்பதாம் சிலுவைப் போரே இறுதிச் சிலுவைப்போர் ஆகும். இது மையக்கிழக்கில் முடிவடைந்தது.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=சிலுவைப்_போர்கள்&oldid=1075450" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்