அக்டோபர் 26
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | அக்டோபர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
| MMXIII | ||||||
அக்டோபர் 26 கிரிகோரியன் ஆண்டின் 299வது நாளாகும். நெட்டாண்டுகளில் 300வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 66 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- 740 - ரோமப் பேரரசின் கொன்ஸ்டண்டீனபோல் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் பலத்த உயிர்ச் சேதத்தை உண்டுபண்ணியது.
- 1640 - ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்து முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
- 1776 - அமெரிக்கப் புரட்சிக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் பெஞ்சமின் பிராங்கிளின் பிரான்ஸ் புறப்பட்டார்.
- 1859 - வடக்கு வேல்சில் றோயல் சார்ட்டர் என்ற கப்பல் கவிழ்ந்ததில் 459 பேர் இறந்தனர்.
- 1876 - இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தொடருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான முடிவு பிரித்தானிய அரசரால் எடுக்கப்பட்டது.
- 1905 - நோர்வே, சுவீடனிடம் இருந்து விடுதலை அடைந்தது.
- 1917 - முதலாம் உலகப் போர்: இத்தாலி கபொரேட்டொ என்ற இடத்தில் ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா நாடுகளுடன் மோதி கடும் தோல்வியைச் சந்தித்தது.
- 1917 - முதலாம் உலகப் போர்: பிரேசில் போரில் குதித்தது.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: சான்டா குரூஸ் தீவுகளில் இரண்டு அமெரிக்க வான்படைக் கப்பல்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
- 1947 - காஷ்மீர் மகாராஜா இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்கச் சம்மதித்தார்.
- 1947 - ஈராக்கிலிருந்து பிரித்தானிய இராணுவம் வெளியேறியது.
- 1955 - ஆஸ்திரியாவில் கடைசி கூட்டுப்படைகள் வெளியேறின. ஆஸ்திரியா அணிசேரா நாடாக தன்னை அறிவித்தது.
- 1956 - ரஷ்ய இராணுவம் ஹங்கேரியை முற்றுகையிட்டது
- 1977 - பெரியம்மை நோய் தாக்கிய கடைசி நோயாளி சோமாலியாவில் அடையாளம் காணப்பட்டார். உலக சுகாதார அமைப்பு இந்நாளை பெரியம்மையின் கடைசி நாளாக அறிவித்தது.
- 1979 - தென் கொரியா அதிபர் பார்க் சோங்-ஹீ இராணுவத் தளபதி கிம் ஜே-கியூ என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1984 - "பேபி ஃபே" (Baby Fae) பபூன் என்ற மனிதக் குரங்கிலிருந்து இருதய மாற்றைப் பெற்று 21 நாட்கள் உயிர் வாழ்ந்தது.
- 1994 - ஜோர்தான் மற்றும் இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
- 1994 - பேர்மாவின் கடைசித் தேற்றம் அண்ட்ரூ வைல்ஸ் என்பவரால் நிறுவப்பட்டது என அறிவிக்கப்பட்டது.
- 1995 - இஸ்லாமிய ஜிகாட் தலைவர் ஃபாதி ஷிக்காகி என்பவர் மோல்டாவில் உள்ள விடுதி ஒன்றில் மொசார்ட் அமைப்பினரால் கொல்லப்பட்டார்.
- 2000 - ஐவரி கோஸ்ட்டின் அதிபர் ரொபேர்ட் கூயெய் பதவியிறக்கப்பட்டு லோரெண்ட் குபாக்போ என்பவர் அதிபரானார்.
- 2001 - ஐக்கிய அமெரிக்கா "அமெரிக்க தேசப் பற்று சட்டத்தை" நிறைவேற்றியது.
- 2002 - மொஸ்கோவில் நாடக மாளிகை ஒன்றில் செச்னியா தீவிரவாதிகள் மூன்று நாட்களாகப் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகள் விவகாரம் முடிவுக்கு வந்தது. 150 பணயக் கைதிகளும் 50 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
- 2003 - கலிபோர்னியாவில் இடம்பெற்ற தீயில் 15 பேர் கொல்லப்பட்டு 250,000 ஏக்கர், மற்றும் 2,200 வீடுகள் சான் டியேகோ நகரில் அழிந்தன.
பிறப்புக்கள்[தொகு]
- 1947 - இலரி கிளின்டன், ஐக்கிய அமெரிக்காவின் செனட் அவை உறுப்பினர்
- 1959 - எவோ மொரல்ஸ், பொலிவியாவின் சனாதிபதி
- 1985 - அசின், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 1985 - மான்ட்டே எலிஸ், அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர்
இறப்புகள்[தொகு]
- 2001 - மரகதம் சந்திரசேகர், இந்தியக் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர், முன்னாள் மத்திய அமைச்சர்