செச்சினியா
| செச்சினியக் குடியரசு Chechen Republic Чеченская Республика Нохчийн Республика (செச்சின்) |
|
|---|---|
![]() |
|
| சின்னம் | கொடி |
| நாட்டு வணக்கம்: | |
| தலைநகர் | குரொஸ்னி |
| அமைக்கப்பட்டது | ஜனவரி 11, 1991 |
| அரசியல் நிலை மாவட்டம் பொருளாதாரப் பிரிவு |
குடியரசு தெற்கு வடக்கு கவ்காசஸ் |
| குறியீடு | 20 |
| பரப்பளவு | |
| பரப்பளவு - நிலை |
15,300 கிமீ² 77வது |
| மக்கள் தொகை | |
| மக்கள் தொகை - நிலை - அடர்த்தி - நகரம் - நாட்டுப்புறம் |
11,03,686 49வது 72.1 / கிமீ² 33.8% 66.2% |
| சட்டபூர்வ மொழிகள் | ரஷ்யன், செச்சின் |
| அரசு | |
| அதிபர் | ரம்சான் காதிரொவ் |
| அரசுத் தலைவர் | ஓடெஸ் பாய்சுல்தானொவ் |
| சட்டவாக்க சபை | செச்சினிய நாடாளுமன்றம் |
| அரசியலமைப்பு | செச்சினியக் குடியரசின் அரசியலமைப்பு |
| சட்டபூர்வ இணையதளம் | |
| http://chechnya.gov.ru/ | |
செச்சினியக் குடியரசு (Chechen Republic, ரஷ்யன்: Чече́нская Респу́блика, செச்சேன்ஸ்கயா ரிஸ்புப்ளிக்கா; செச்சின்: Нохчийн Республика, Noxçiyn Respublika), அல்லது, பொதுவாக, செச்சினியா (Chechnya, Чечня́; Нохчийчоь, Noxçiyçö), என்பது ரஷ்யக் கூட்டமைப்பின் ஒரு உட்குடியரசாகும்.
இது வடக்கு கவ்காசஸ் மலைத்தொடரில் தெற்கு கூட்டாட்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடமேற்கே ஸ்தாவ்ரபோல் பிரதேசம் (Stavropol Krai), வடகிழக்கு மற்றும் கிழக்கில் தாகெஸ்தான் குடியரசும், தெற்கில் ஜோர்ஜியா, மேற்கே இங்குஷேத்தியா மற்றும் வடக்கு அசேத்தியா ஆகிய ரஷ்யக் குடியரசுகளும் அமைந்துள்ளன.
1991 இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் செச்சினியா விடுதலையை நாடியது. ரஷ்யாவுடனான முதலாவது செச்சினியப் போரின் போது (1994-1996) செச்சினியரல்லாத சிறுபான்மையோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்[1]. பின்னர் அது de facto அரசை அறிவித்தது. ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு மட்டுமே ஜனவரி 2000 ம் ஆண்டில் இதனை அங்கீகரித்தது[2]. 1999 இல் இடம்பெற்ற இரண்டாம் போரின் பின்னர் ரஷ்யா தனது நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் செச்சினியாவைக் கொண்டுவந்தது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ [1] Chechnya Advocacy Network. Refugees and Diaspora
- ↑ The Jamestown Foundation. "The Taliban formally recognizes Chechnya". பார்த்த நாள் 2007-01-23.
[தொகு] வெளி இணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: Chechnya |
