கபர்தினோ-பல்கரீயா
| கபார்தினோ-பால்கர் குடியரசு Кабардино-Балкарская Республика Къэбэрдей-Балъкъэр Республикэ (கபார்திய மொழி) Къабарты-Малкъар Республика (பல்கர் மொழி) |
|
|---|---|
ரஷ்யாவில் கபார்தினோ-பால்கர் குடியரசின் அமைவிடம் |
|
| சின்னம் | கொடி |
கபார்தினோ-பால்கர் குடியரசின் Coat of arms |
கபார்தினோ-பால்கர் குடியரசின் கொடி |
| நாட்டு வணக்கம்: கபார்தினோ-பால்கர் குடியரசின் தேசியப் பாடல் | |
| தலைநகரம் | நால்ச்சிக் |
| அமைக்கப்பட்டது | ஜனவரி 5, 1936 |
| அரசியல் நிலை மாவட்டம் பொருளாதாரப் பிரிவு |
குடியரசு தெற்குப்பகுதி வட காக்கேசஸ் |
| குறியீடு | 07 |
| பரப்பளவு | |
| பரப்பளவு - நிலை |
12,500 கிமீ² 78th |
| மக்கள் தொகை | |
| மக்கள் தொகை - நிலை - அடர்த்தி - நகரம் - நாட்டுப்புறம் |
9,01,494 60ஆவது 72.1 / கிமீ² 56.6% 43.4% |
| சட்டபூர்வ மொழிs | ரஷ்ய மொழி, கபார்தியம், பால்கர் |
| அரசு | |
| குடியரசுத் தலைவர் | ஆர்சென் கனோகோவ் |
| அரசுத் தலைவர் | ஆண்ட்ரே யாரின் |
| சட்டவாக்க சபை | நாடாளுமன்றம் |
| அரசமைப்புச் சட்டம் | கபர்தீனோ-பல்கரீயா குடியரசின் அரசமைப்புச் சட்டம் |
| சட்டபூர்வ இணையதளம் | |
கபர்தினோ-பல்கரீயா என்பது ரஷ்யக்கூட்டமைப்பின் ஒரு உட்குடியரசாகும். வடக்குக் காக்கேசஸ் மலைகளில் அமைந்துள்ள இதன் வடக்குப் பகுதி சமவெளியாக உள்ளது. 12,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த உட்குடியரசில் 2002 ஆண்டுக் கணக்குப்படி 901,494 மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 56.6% நகரப் பகுதிகளிலும், 43.4% மக்கள் நாட்டுப் புறங்களிலும் வாழ்கின்றனர். கபர்தினோ-பல்கரீயா, இரண்டு இனங்களின் ஆட்சிப்பகுதிகளாக உள்ளது. ஒன்று, வடமேற்குக் காக்கேசிய மொழி ஒன்றைப் பேசுகின்ற கபர்துகளைப் பெரும்பான்மையாகக் கொண்டது. மற்றப்பகுதி துருக்கிய மொழி பேசுகின்ற பல்கர் இனத்தைப் பெரும்பான்மையாகக் கொண்டது. இவர்களுள் கபர்துகள் 55.3% ஆக உள்ளனர். ரஷ்யர்கள் 25.1% உம், பல்கர்கள் 11.6% உம் உள்ளனர். இவர்களோடு, ஒசெட்டியர்கள், துருக்கியர், உக்ரேனியர், ஆர்மீனியர், கொரியர், செச்சென்கள் ஆகியோரும் குறைந்த அளவில் இக் குடியரசில் வாழ்கின்றனர்.
| விக்கி ஊடக நடுவத்தில் Category:Kabardino-Balkaria தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |