மின்னியற்றி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மின்னியற்றி ( Electrical Generator) என்பது இயக்க ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் ஒரு கருவி. இது மின்தூண்டலால் இயலுமாகிறது. மின் ஆற்றலை இயக்க ஆற்றலாக மாற்றும் கருவி மின்சார இயக்கி (மின்னோடி) ஆகும்.
ஒரு காந்தப் புலத்தில் மின்கடத்திச் சுருள் ஒன்று சுழலுமானால் அந்தக் கடத்தி முனைகளில் மின்னழுத்தம் உண்டாகி, மின்னோட்டம் ஏற்படும். இதுவே மின்னியற்றியின் அடிப்படை ஆகும்.