பெஞ்சமின் பிராங்கிளின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பெஞ்சமின் பிராங்கிளின் Benjamin Franklin |
|
| அரசியல் கட்சி | எதுவுமில்லை |
|---|---|
|
|
|
| பிறப்பு | சனவரி 17, 1706 பொஸ்டன், மசாசுசெட்ஸ் |
| இறப்பு | ஏப்ரல் 17 1790 (அகவை 84) பிலடெல்பியா, பென்சில்வேனியா |
| தேசியம் | |
| வாழ்க்கைத் துணை |
டெபோரா றீட் |
| துறை | அறிவியலாளர் எழுத்தாளர் அரசியல்வாதி |
| கையொப்பம் | |
பெஞ்சமின் பிராங்கிளின் (Benjamin Franklin; (ஜனவரி 17, 1706 – ஏப்ரல் 17, 1790) என்பவர் ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர் ஆவார். இவர் ஓர் அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஒரு எழுத்தாளர், அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் ஆவார். மின்னியலில் இவரின் கண்டுபிடிப்புகளுக்கும், கருத்துக்களுக்குமாக இவர் இயற்பியல் சரித்திரத்தில் ஒரு முக்கிமான அறிவியலாளராகக் கருதப்படுகிறார். அமெரிக்க ஆங்கில எழுத்திலக்கணத்திலும் சீர்திருத்த முறைமை அவசியத்தை வலியுறுத்தியவர்.