1790
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 17ம் நூ - 18ம் நூ - 19ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1760கள் 1770கள் 1780கள் - 1790கள் - 1800கள் 1810கள் 1820கள் |
| ஆண்டுகள்: | 1787 1788 1789 - 1790 - 1791 1792 1793 |
| 1790 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1790 MDCCXC |
| திருவள்ளுவர் ஆண்டு | 1821 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2543 |
| சீன நாட்காட்டி | 4486-4487 |
| எபிரேய நாட்காட்டி | 5549-5550 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1845-1846 1712-1713 4891-4892 |
| இரானிய நாட்காட்டி | 1168-1169 |
| இசுலாமிய நாட்காட்டி | 1204 – 1205 |
| ரூனிக் நாட்காட்டி | 2040
|
மே 13: சுவீடன்-ரஷ்யப் போர்
1790 (MDCCXC) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- பெப்ரவரி 2 - வீரபாண்டிய கட்டபொம்மன் 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டான்.
- பெப்ரவரி 4 - பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அரசியலமைப்பைத் தான் பேணுவதாக தேசிய சபையில் வாக்குறுதி அளித்தான்.
- மார்ச் 4 - பிரான்ஸ் 83 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.
- ஏப்ரல் 10 - ஐக்கிய அமெரிக்காவில் காப்புரிமம் (Patent) பற்றிய விதிகள் எழுதப்பட்டன.
- மே 13 - சுவீடனின் மூன்றாம் குஸ்டாவ் எஸ்தோனியாவில் தரித்திருந்த ரஷ்யப் படைகளை அழிக்க தனது கடற்படைகளை ஏவினான். அவனது படையினரில் 51 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் கைப்பற்றப்பட்டனர். 2 கப்பல்கள் மூழ்கின.
- மே 29 - ரோட் தீவு ஐக்கிய அமெரிக்காவின் 13வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- ஜூலை 9 - ரஷ்ய-சுவீடன் போர்: பால்ட்டிக் கடலில் 300 கப்பல்கள் பங்குபற்றிய பெரும் மோதலில் சுவீடன் படைகள் ரஷ்யாவின் மூன்றில் ஒரு பங்கு ரஷ்யக் கப்பல்களைக் கைப்பற்றினர். 304 சுவீடியரும், 3500 ரஷ்யர்களும் கொல்லப்பட்டனர். 51 ரஷ்யக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன.
- ஆகஸ்ட் 2 - ஐக்கிய அமெரிக்காவில் முதற் தடவையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.
- டிசம்பர் 11 - ரஷ்ய-துருக்கியப் போர், 1787-1792: 26,000 துருக்கியப் போர்வீரர்கள் கொல்லப்பட்டனர்.
நாள் அறியப்படாதவை [தொகு]
- வெள்ளி மாளிகை அமைப்பு வேலைகள் ஆரம்பமாயின.
- வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரர் ஆலயம் அமைக்கப்பட்டது.
- பிலிப்பு தெ மெல்லோ டோரா என்ற யூதர்களின் புனித நூலை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.
தொடரும் நிகழ்வுகள் [தொகு]
பிறப்புக்கள் [தொகு]
- மார்ச் 29 - ஜான் டைலர், 10வது அமெரிக்க ஜனாதிபதி (இ. 1862)
இறப்புக்கள் [தொகு]
- ஏப்ரல் 17 - பெஞ்சமின் பிராங்கிளின், அமெரிக்க அறிவியலாளர் (பி. 1706)
- ஆகஸ்ட் 10 - பிலிப்பு தெ மெல்லோ, தமிழ் டச்சு அறிஞர் (பி. 1723)