பிரான்சின் பதினாறாம் லூயி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| பதினாறாம் லூயி Louis XVI |
|
| பிரான்சின் மன்னன் | |
|---|---|
| ஆட்சிக்காலம் | 10 மே 1774 – 10 ஆகஸ்ட் 1792 |
| முடிசூட்டு விழா | 11 ஜூன் 1775 |
| முழுப்பெயர் | லூடி-ஆகுஸ்டே |
| Titles | பெரியின் சிற்றரசன் (1754–65) பிரான்சின் டோஃபன் (1765–74) பிரான்சின் மன்னன் (1774–91) பிரெஞ்சு மன்னன் (1791–92) 'லூயி கேப்பிட்' (1792-93) |
| பிறப்பு | ஆகஸ்ட் 23 1754 |
| பிறப்பிடம் | வேர்சாஹி அரண்மனை, பிரான்ஸ் |
| இறப்பு | ஜனவரி 21 1793 (அகவை 38) |
| இறந்த இடம் | பாரிஸ், பிரான்ஸ் |
| புதைக்கப்பட்டது | சென் டெனிஸ் பசீலிக்கா, பிரான்ஸ் |
| முன்னிருந்தவர் | பதினைந்தாம் லூயி |
| பின்வந்தவர் | நடப்பின்படி தேசிய அவை De jure பதினேழாம் லூயி அடுத்தூ முடிசூடியவர்: முதலாம் நெப்போலியன் (1804 இல்) |
| துணைவி | மரீ அன்டொனெட் (1755–93) |
| வாரிசுகள் | மரீ-தெரேஸ்-சார்லோட் (1778–1851) லூயி-ஜோசப் (1781–89) பதினேழாம் லூயி (1785–95) சோஃபீ ஹெலன் பீட்ரிக்ஸ் (1786–87) |
| அரச குடும்பம் | போர்பன் மாளிகை |
| தந்தை | லூயி (1729-1765) |
| தாய் | மரீ-ஜோசெஃபி (1731–67) |
பதினாறாம் லூயி (Louis XVI), (23 ஆகஸ்ட், 1754 – 21 ஜனவரி, 1793), பிரான்சின் மன்னனாக 1774 முதல் 1792 வரை ஆட்சி செய்தவன். இவனது இயற்பெயர் "லூயி-ஆகுஸ்டே" (Louis-Auguste) ஆகும். 1972, ஆகஸ்ட் 10 இல் இவன் பிரெஞ்சுப் புரட்சியின் போது இடம்பெற்ற எழுச்சியில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான். விசாரணையின் முடிவில் இவன் அரசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு ஜனவரி 21, 1793 இவனுக்கு மக்கள் முன்னிலையில் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனை வழங்கப்பட்டது.
பதினாறாம் லூயி மன்னனின் மறைவு பிரான்சின் மன்னராட்சியின் முடிவுக்கு வழி வகுத்தது எனலாம். இதுவே பின்னர் முதலாம் நெப்போலியன் ஆட்சியைப் பிடிக்க வழிகோலியது.
பதினாறாம் லூயியை முதலில் மக்கள் விரும்பியிருந்தாலும் அவனது ஆட்சித்திறமையின்மை மற்றும் நாட்டில் நிலவிய வறுமை, பட்டினி காரணமாக பெரும்பான்மையான பிரெஞ்சு மக்கள் போகப் போக அவன் மீதும் அவனுடைய மனைவி மரீ அன்டெனெட் மீதும் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்திருந்தார்கள்.