மரபு வழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மரபு வழி [1] என்பது மரபணுக்களின் வழித்தோன்றல்கள். அரச பரம்பரையைக் குறிக்க இச்சொல்லை வரலாற்று ஆசிரியர்கள் பயன்படுத்துகின்றனர். இதனைக் குடி எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. [2] [3] ஆசிரியரின் வழிவந்த மாணாக்கர் பரம்பரையும் தமிழக வரவாற்றில் உண்டு. இது கருத்து மரபு. இதனைப் பரம்பரை என்றே வழங்குவர்.

புராணம்[தொகு]

பொதுவாக இந்து மத புராணங்களில் ஒரு இனத்தவரை இனங்கான வம்சத்தை அடையாளப்படுத்துவர். பெரும்பாலும் சூரிய வம்சம், சந்திர வம்சம் இவ்விரண்டிலும் மற்ற வம்சங்கள் அடங்கிவிடும். தமிழகத்தில் சேரர், பாண்டியர் சந்திர வம்சம்[4] எனவும் சோழர் சூரிய வம்சம்[5] பல்லவர் பரத்துவாசர் வம்சம்[6] எனவும் கூறப்படுகின்றனர்.

ஆட்சிமுறை அல்லது தலைமைமுறை வரிசையைக் குறிக்க மரபு, பரம்பரை என்னும் சொற்களைக் கையாளுகின்றனர். [7]

மாணாக்கர் பரம்பரை[தொகு]

இது வழிவழியாக இவருக்குப் பின்னர் இவர் மகன் என வருவது அன்று. இவருக்குப் பின்னர் இவரது மாணாக்கர் என வருவது.

மேற்கோள்கள்[தொகு]

  1. தொல்காப்பியம் மரபியல்
  2. ஒருவீர் தோற்பினும் தோற்பது உங் குடியே (புறநானூறு 45, நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி சண்டையைத் தவிர்க்க, கோவூர் கிழார் பாடியது)
  3. ஆராச் செருவின் சோழர் குடிக்கு உரியோர்
    ஒன்பதின்மர் வீழ, வாயில் புறத்து இறுத்து; (பதிற்றுப்பத்து, ஐந்தாம்பத்து, பதிகம்)
  4. ஸ்வஸ்திஸரீ சந்திரனது வழித்தோன்றிஇத் தராமண்டல - வீர பாண்டியன் (946-966) சிவகாசிச் செப்பேட்டுப் பகுதி, மேலும் இம்மெய்க்கீர்த்திகளில் மேலும் சில பாண்டியர் சந்திர வம்ச வழிவந்தோர் எனக்கூறப்படுகின்றனர் [1]
  5. கலிங்கத்துப்பரணி சோழர் வம்சாவளி
  6. மயிதவோலுப் பட்டயம்
  7. சோழர் மரபு, சோழர் பரம்பரை
"http://ta.wikipedia.org/w/index.php?title=மரபு_வழி&oldid=1376015" இருந்து மீள்விக்கப்பட்டது