ஜனவரி 21
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(21 ஜனவரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | சனவரி 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
| MMXIII | ||||||
ஜனவரி 21 கிரிகோரியன் ஆண்டின் 21வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 344 (நெட்டாண்டுகளில் 345) நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- 1643 - ஏபல் டாஸ்மான் தொங்காவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் ஆனார்.
- 1793 - பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அரசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டான்.
- 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் ஐக்கிய அமெரிக்காவின் செனட்டில் இருந்து விலகினார்.
- 1924 - சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் இறந்தார்.
- 1925 - அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: அவுஸ்திரேலிய மற்றும் பிரித்தானியப் படைகள் லிபியாவின் டோபுருக் நகரைத் தாக்கின.
- 1947 - முதலாவது சிங்களத் திரைப்படம் (கடவுணு பொரன்டுவ) திரையிடப்பட்டது.
- 1954 - உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், USS நோட்டிலஸ், ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
- 1960 - மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.
- 1972 - திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.
- 2004 - நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட ஸ்பிரிட் தளவுளவியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எனினும் இது பூமியில் தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன.
- 2008 - அலாஸ்காவின் இயாக் மொழி பேசும் கடைசி பழங்குடி இறந்தார்.
பிறப்புகள்[தொகு]
- 1912 - கொன்ராட் எமில் புளொக், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 2000)
- 1953 - பால் ஆலன், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர்.
- 1963 - அகீம் ஒலாஜுவான், நைஜீரியக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்[தொகு]
- 1924 - விளாடிமிர் லெனின், மார்க்சியப் புரட்சியாளர் (பி. 1870)
- 1989 - சு. வித்தியானந்தன், ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர்
- 2002 - சொக்கலிங்க பாகவதர், தமிழ் திரைப்பட நடிகர்