சஞ்சய் சுப்ரமண்யன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சஞ்சய் சுப்ரமண்யன் | |
|---|---|
| பிறப்பு | சனவரி 21, 1968 |
| பிறப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| இசை வகை(கள்) | கர்நாடக இசை - இந்திய பாரம்பரிய இசை |
| தொழில்(கள்) | பாடகர் |
சஞ்சய் சுப்ரமண்யன் (பி. ஜனவரி 21, 1968) தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். இவர் தனது இசை நிகழ்ச்சிகளை இந்தியா முழுவதும் மற்றும் பல்வேறு உலகநாடுகளிலும் நிகழ்த்தியுள்ளார். தனது பாடும் திறனுக்காக பல்வேறு விருதுகளை இவர் பெற்றிருக்கிறார். கேள்வி ஞானம் மூலமாக நேர்த்தியான திறமையை ஒரு இசைக்கலைஞன் வெளிப்படுத்தமுடியும் என்பது இவரின் நம்பிக்கை.