நவம்பர் 16
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | நவம்பர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| MMXIII | ||||||
நவம்பர் 16 கிரிகோரியன் ஆண்டின் 320வது நாளாகும். நெட்டாண்டுகளில் 321வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 45 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1384 - பெண்ணாக இருந்தாலும் பத்து வயது "ஜாட்வீகா" என்பவள் போலந்தின் மன்னனாக முடிசூடினாள்.
- 1532 - ஸ்பானியத் தளபதி பிரான்சிஸ்கோ பிசாரோ இன்கா பேரரசின் மன்னன் அட்டஹுவால்பாவைத் தோற்கடித்து சிறைப்பிடித்தான்.
- 1632 - சுவீடனின் குஸ்டாவிஸ் அடோல்பஸ் போரில் கொல்லப்பட்டான்.
- 1846 - இலங்கையில் விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1849 - அரசுக்கெதிராகப் புரட்சி செய்ததாகக் குற்றம் சாட்டி ரஷ்ய எழுத்தாளரான பியோதர் தஸ்தயெவ்ஸ்கிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும் தண்டனை பின்னர் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது.
- 1885 - கனடாவின் மேட்டிஸ் பழங்குடித் தலைவர் லூயிஸ் ரியெல் தூக்கிலிடப்பட்டார்.
- 1896 - முதற்தடவையாக மின்சாரம் மின்னாக்கி ஒன்றிலிருந்து நகருக்கு அனுப்பப்பட்டது. இது நடந்தது நியூ யோர்க் நகரில்.
- 1904 - ஜோன் பிளெமிங் வெற்றிடக் குழாயைக் கண்டுபிடித்தார்.
- 1907 - ஒக்லகோமா ஐக்கிய அமெரிக்காவின் 46வது மாநிலமாக இணைந்தது.
- 1920 - ஆஸ்திரேலியாவின் தேசிய விமான சேவை குவாண்டாஸ் ஆரம்பிக்கப்பட்டது.
- 1933 - ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் தூதரக உறவை ஆரம்பித்தன.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் விமானப் படைகள் ஜெர்மனியின் ஹாம்பேர்க் நகரில் குண்டுகளை வீசின.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் டியூரென் நகரம் கூட்டுப் படைகளின் குண்டுத் தாக்குதலில் முற்றாக அழிந்தது.
- 1945 - யுனெஸ்கோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1945 - பனிப்போர்: ஐக்கிய அமெரிக்காவின் இராணுவம் ஜெர்மனியின் அறிவியலாளர்கள் 88 பேரை தனது வானியல் தொழில்நுட்பத்தில் உதவுவதற்காக இரகசியமாக நாட்டுக்குள் அனுமதித்தது.
- 1965 - சோவியத்தின் வெனேரா 3 விண்கப்பல் வெள்ளி கோளுக்கு செலுத்தப்பட்டது. வேறொரு கோளின் தரையை அடைந்த முதலாவது விண்கப்பல் இதுவாகும்.
- 1973 - நாசா மூன்று விண்வெளி வீரர்களுடன் ஸ்கைலாப் 4 84-நாள் திட்டத்தில் விண்ணுக்கு அனுப்பியது.
- 1988 - சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானில் இடம்பெற்ற தேர்தல்களில் பெனசீர் பூட்டோ பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 2002 - சார்ஸ் நோய் முதன் முதலில் சீனாவின் குவாங்டோங் என்ற இடத்தில் பதியப்பட்டது.
பிறப்புக்கள் [தொகு]
- 1922 - ஜோசே சரமாகூ, நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கேய எழுத்தாளர்
- 1930 - சின்னுவ அச்சிப்பே, நைஜீரிய எழுத்தாளர்
- 1982 - அமாரே ஸ்டெளடமையர், அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள் [தொகு]
- 1999 - டானியல் நேத்தன்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1928)
- 2006 - மில்ட்டன் ஃப்ரீட்மன், நோபல் பரிசு பெற்ற பொருளியல் நிபுணர் (பி. 1912)