அவிலா, எசுப்பானியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவிலா (Ávila)
புகழ்மிகு நகரத் தூண்கள்
புகழ்மிகு நகரத் தூண்கள்
அவிலா (Ávila)-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் அவிலா (Ávila)
சின்னம்
அடைபெயர்(கள்): Ávila de los Caballeros, Ávila del Rey, Ávila de los Leales
குறிக்கோளுரை: Una ciudad para todos... (A town for everyone...)
நாடுவார்ப்புரு:நாட்டுத் தகவல் எசுப்பானியம்
தன்னாட்சிக்குட்பட்ட பிரதேசம்காஸ்டிலொன் லியோன்
மாகாணம் அவிலா
அரசு
 • மேயர்Miguel Ángel García Nieto (PP)
பரப்பளவு
 • நிலம்231.9 km2 (89.5 sq mi)
ஏற்றம்
1,132 m (3,714 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்58,245
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
Postal code
05001 – 05006
Area code34 (எசுப்பானியம்) + 920 (அவிலா)
இணையதளம்http://www.avila.es (எசுப்பானியம்)

அவிலா (Ávila) (எசுப்பானிய ஒலிப்பு: [ˈaβila]; இலத்தீனிய மொழி: Abila and Obila) என்பது எசுப்பானியாவின் தன்னாட்சிக்கு உட்பட்ட ஒரு நகரம் ஆகும். இதுவே அவிலா மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.

ஒரு காலத்தில் இந்நகரம் கற்கள் மற்றும் புனிதர்களின் நகரம் (Town of Stones and Saints) எனப்போற்றப்பட்டது. அத்துடன் முற்காலத்திலே கோதிக் ரோமனெஸ்க் கட்டிடக்கலைகளுடன் கூடிய தேவாலயங்கள், விடுதிகள் அதிகம் காணப்படும் நகரமாகப் போற்றப்பட்டது. முக்கியமானதுமான முழுமையானதுமான இடைக்காலத் தூண்களின் தொகுதியைக்கொண்ட நகரமாக இது காணப்படுகிறது. இத்தூண்கள் ரோமனெஸ்க் கட்டிடக்கலையின் வடிவில் கட்டப்பட்டுள்ளன. இது 1985 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால், உலகப் பாரம்பரியக் களமாக அறிமுகப்படுத்தப்பட்டதுடன் பட்டியலிலும் சேர்க்கப்பட்டது.

புவியியல்[தொகு]

அமைவிடம்[தொகு]

இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 1132 மீற்றர்கள் (3714 அடிகள்) உயரத்தில் காணப்படுகிறது. டுஎரோ (Duero) ஆற்றின் கிளை நதியான அடஜா ஆற்றின் (Adaja river) வலது கரைக்கு அருகிலே ஒரு சிறு பாறைத் தொகுதியின் மேல் இந்நகரம் அமையப்பெற்றுள்ளது. இதுவே எசுப்பானியாவில் அமைந்துள்ள உயரமான மாகாணத் தலைநகரம் ஆகும்.

காலநிலை[தொகு]

ஜூலை மாதமே இங்கு மிகவும் சூடான மாதமாகும். ஜூலை மாதத்தில் இதன் வெப்பநிலை சராசரியாக 19.7 °C (67 °F) ஆகும். இங்கு மிகவும் குளிரான மாதம் சனவரி ஆகும். இம்மாத வெப்பநிலை சராசரியாக 2.8 °C (37 °F) ஆகும். இதன் வருடாந்த சராசரி வீழ்படிவு நிலை 400 மி.மீ (15.75 அங்குலம்) ஆகும்.[1] அடஜா ஆறானது வருடத்தின் சிலமாதங்களில் வற்றிப்போகிறது, ஆகையால் அவிலாவில் வரலாற்றுக்காலம் தொட்டே நீர்ப் பிரச்சனைகள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Valores climatológicos normales – Ávila". Agencia Estatal de Meteorologica. பார்க்கப்பட்ட நாள் 1 October 2012.

மேலும் வாசிக்க[தொகு]

  • Parkinson Keyes, Frances (1957). The Land of Stones and Saints. Doubleday. (Lives of five famous people of the province of Avila, Spain, in the 15th, 16th, and 17th centuries: Isabel the Catholic, St Teresa of Ávila, St John of the Cross, María Vela and San Pedro Bautista)

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
அவிலா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவிலா,_எசுப்பானியா&oldid=3353470" இலிருந்து மீள்விக்கப்பட்டது